Skip to main content
கூடுதல் பாதுகாப்பு பணிகளில் KTMB !

 

KTMB ரயில் தண்டவாளங்கள் முழுவதும், கண்காணிப்பு கேமராக்கள் உள்ளிட்ட நவீன கண்காணிப்பு அமைப்புகளைப் பொருத்துவதற்கான பணிகள் இறுதிக்கட்டத்தை எட்டியுள்ளன !

கண்காணிப்புக் கருவிகளைப் பொருத்தி, அவற்றைத் தரவுத் தொடர்பு அமைப்புடன் இணைக்கத் தேவையான பணிகள் மேற்கொள்ளப்பட்டு வருவதாக, KTMB நிறுவனம் தெரிவித்துள்ளது.

குறிப்பாக, Arau மற்றும் Kodiang இடையே ரயில் மீது வீசப்பட்ட பொருளால், அதன் ஜன்னல் உடைந்த சம்பவத்தைத் தொடர்ந்து, அந்நடவைக்கைகள் முன்னெடுக்கப்பட்டுள்ளன.

KL Sentral-லில், இன்று நடைபெற்ற தீபாவளி அன்பளிப்புப் பொட்டலங்கள் வழங்கும் நிகழ்ச்சிக்குப் பிறகு, அந்நிறுவனம் அதனை கூறியது.

----------

இவ்வேளையில், தீபாவளியை முன்னிட்டு, ETS மற்றும் EMUPlus ரயில் சேவைகளில், இதுவரை ஒரு லட்சத்து 304 டிக்கெட்டுகள் விற்பனை செய்யப்பட்டுள்ளன !

நவம்பர் 5 முதல் 10-ஆம் தேதி வரையிலான பயணங்களுக்கு ஒதுக்கப்பட்ட, 96 ஆயிரத்து 752 இருக்கைகளைக் காட்டிலும், அது, 108 விழுக்காடு அதிகமாகும் என, KTMB நிறுவனம் தெரிவித்துள்ளது.

நவம்பர் 8-ஆம் தேதி ஞாயிற்றுக்கிழமை தீபாவளி கொண்டாடப்படுகிறது.

---------

பினாங்கின் மூன்றாவது போக்குவரத்துப் பாதைக்கான மாற்றுத் திட்டமாக, கடலுக்கு அடியில் சுரங்கப்பாதை அமைப்பதற்குப் பதிலாக, பாலம் கட்டும் திட்டத்தை, மாநில அரசு ஆய்வு செய்து வருகிறது !

அந்தப் பாலத்திற்கான வடிவமைப்பு தொடர்பான ஆரம்பக்கட்ட ஆய்வுகள், தற்போது மேற்கொள்ளப்பட்டு வருவதாக, ஆட்சிக்குழு உறுப்பினர் தெரிவித்துள்ளார்.

அந்த ஆய்வில், பினாங்கு துறைமுகத்தை விரிவுபடுத்தும் திட்டமும், Gurney Bay மற்றும் அதன் சுற்றுப்புறப் பகுதிகளில், போக்குவரத்து நெரிசலைக் குறைப்பதற்கான தேவையும், கருத்திற் கொள்ளப்படும், என்றாரவர்.

--------

கெடா, பினாங்கு, பேராக் உட்பட சில மாநிலங்களின் பெரும்பாலான பகுதிகளில், இன்றிரவு 7 மணி வரை, இடியுடன் கூடிய கனமழை பெய்யும் என, மலேசிய வானிலை ஆய்வு மையம் கணித்துள்ளது !  

---------

சிலாங்கூர் பெட்டலிங் ஜயாவில், தனது காதலியின் மீது எரி திராவகம் வீசிய சம்பவம் தொடர்பில், முக்கியச் சந்தேக நபராகக் கருதப்படும் வெளிநாட்டு ஆடவர், புதன்கிழமை வரை தடுத்து வைக்கப்படுகிறார் !

RAAGA Aaha Siranta Isai!