Skip to main content
குவேட் விமான நிலைய தாக்குதல் ; மலேசியர்கள் பாதிக்கப்படவில்லை !

 

குவேட் அனைத்துலக விமான நிலையத்தைக் குறிவைத்து நடத்தப்பட்ட, ட்ரோன்  மற்றும் ஏவுகணைத் தாக்குதலை அடுத்து, மலேசியர்கள் பாதுகாப்பாக இருப்பதை, வெளியுறவு அமைச்சு உறுதிப்படுத்தியுள்ளது !

அந்நாட்டில் உள்ள மலேசிய தூதரகம், அங்குள்ள நிலைமையை நெருக்கமாகக் கண்காணித்து வருகிறது.  

அந்த தாக்குதலை அடுத்து, அந்த விமான நிலையம் தற்காலிகமாக மூடப்பட்டுள்ளது.

---------

அரசாங்கம், புதிய கட்டண அமைப்பின் கீழ், பத்தாண்டு கால கடப்பிதழை அறிமுகப்படுத்தியுள்ளது !

இந்தக் கட்டணம் நேற்று முதல் அமலுக்கு வந்துள்ளது.

18 முதல் 59 வயதுடைய விண்ணப்பதாரர்களுக்கு, கடப்பிதழ் கட்டணம் 350 ரிங்கிட்டாக நிர்ணயிக்கப்பட்டுள்ள வேளை, 60 வயது மற்றும் அதற்கும் மேல் வயதுடையவர்கள், 175 ரிங்கிட் செலுத்த வேண்டும் ;  OKU அட்டை வைத்திருப்பவர்கள் கடப்பிதழை இலவசமாக பெறுவர்.

----------

சில செய்திகள் சுறுக்கமாக ;

பேராக் Gunung Batu Putih மலையில், கடந்த மாத இறுதியில் மலையேறச் சென்று மாயமான பெண்ணைத் தேடி மீட்கும் நடவடிக்கைகளுக்கு வழிவிட ஏதுவாக, அம்மலை தற்காலிகமாக மூடப்பட்டுள்ளது !

---------

ஜொகூர் Pontian-னில், ஓர் உணவகத்துக்கு வெளியே, 22 வயது இளைஞர், கொடூரமாக வெட்டிக் கொலை செய்யப்பட்ட சம்பவம் தொடர்பில், எழுவர் மீது குற்றஞ்சாட்டப்பட்டுள்ளது !

--------

ஜொகூர் பாருவில், அடுக்குமாடி குடியிருப்புப் பகுதியில், கடந்த மாதம், தொழில்நுட்ப வல்லுநர் ஒருவரைக் கொலை செய்ததாக, இந்தோனேசியர் ஒருவர் மீது நீதிமன்றத்தில் குற்றஞ்சாட்டப்பட்டுள்ளது !

---------

சிலாங்கூர் பூச்சோங்கில், 23 மாத பெண் குழந்தையைக் கொலை செய்ததாக, குழந்தை பராமரிப்பாளர் ஒருவர் மீது நீதிமன்றத்தில் குற்றஞ்சாட்டப்பட்டுள்ளது !

---------

கெடா Kuala Ketil-லில்,  மளிகைக் கடை உதவியாளர் ஒருவரை, கத்தியால் வெட்டியதாகக் கூறப்படும், முகமூடி அணிந்த நபர்களுக்கு, காவல்துறை வலைவீசியுள்ளது !

RAAGA Aaha Siranta Isai!