
தலைநகரில் பல பகுதிகளில் மரங்களை பராமரிக்கும் மற்றும் அகற்றும் பணிகள், தொடர்ந்து மேற்கொள்ளப்பட்டு வருகின்றன !
நகர்ப்புற மரங்களால் ஏற்படும் ஆபத்துகளை குறைத்து, பொதுமக்களின் பாதுகாப்பை மேம்படுத்தும் நடவடிக்கையின் ஒரு பகுதியாக, இந்நடவடிக்கை முன்னெடுக்கப்படுகிறது.
அண்மையில் கூட, Jalan Tun Razak சாலையில், மரமொன்று விழுந்து, ஆடவர் ஒருவர் உயிரிழந்த சம்பவம் நிகழ்ந்தது.
அச்சம்பவத்தில், கைக்குழந்தை உட்பட ஏழுவர் பயணித்த மற்றொரு வாகனமும் பாதிக்கப்பட்ட நிலையில், அதில் இருந்த அனைவரும் சிகிச்சைக்காக மருத்துவமனைக்கு கொண்டு செல்லப்பட்டனர்.
--------
கெடா லங்காவியில் உள்ள ஆலயமொன்றின் சூலத்தை சேதப்படுத்தியதாக, சமூக ஆர்வலர் Tamim Dahri மீது, நீதிமன்றத்தில் குற்றஞ்சாட்டப்பட்டுள்ளது !
எனினும், அவர் தம்மீதான குற்றச்சாட்டை மறுத்து விசாரணை கோரினார்.
இக்குற்றம் நிரூபிக்கப்பட்டால், அதிகபட்சம் ஈராண்டுகள் சிறைத்தண்டனை, அபராதம் அல்லது இரண்டுமே விதிக்கப்படலாம்.
---------
கோலாலம்பூர் Cheras-சில், இரு வார காலத்திற்குள் பதிவான இரு வெவ்வேறு தாக்குதல் சம்பவங்கள் தொடர்பில், 4 இளவயதினர் மற்றும் 2 ஆடவர்கள் கைது செய்யப்பட்டுள்ளனர் !
முதல் சம்பவத்தில், 14 வயதை ஒட்டிய 4 சந்தேக நபர்கள், மற்றொரு இளவயதினரை தாக்கியதாகக் கூறப்படும் சம்பவம் தொடர்பில் கைதாகினர்.
மற்றொரு சம்பவத்தில், அங்குள்ள அடுக்குமாடி குடியிருப்புப் பகுதியில் ஏற்பட்ட மோதல் தொடர்பில், 21 மற்றும் 22 வயதுடைய 2 ஆடவர்கள் கைதாகினர்.
--------
Negeri Sembilan தேர்தல் பிரச்சார காலத்தில், அரசியல் கொடியை சேதப்படுத்தி, கால்வாயில் வீசியதாகக் கூறப்படும் நபர் ஒருவர் கைது செய்யப்பட்டுள்ளார் !
ஆகஸ்டு 1-ஆம் தேதி, அங்கு 36 தொகுதிகளில் தேர்தல் நடைபெறுகின்ற நிலையில், அதில் மொத்தம் 103 வேட்பாளர்கள் போட்டியிடுகின்றனர்.
---------
இலக்கு வைக்கப்பட்ட RON95 பெட்ரோல் மானிய முறை மூலம் கிடைக்கும் சேமிப்பு, அரசாங்கத்தின் நிதி நிலையை மேம்படுத்த மட்டும் பயன்படுத்தப்படவில்லை ; அது மக்களுக்கு வழங்கப்படும் உதவிகளை அதிகரிக்க பயன்படுத்தப்பட்டுள்ளதாக, நிதியமைச்சு தெரிவித்துள்ளது !