Skip to main content
லோக்கின் பதவி விலகலை இன்னும் ஏற்றுக்கொள்ளவில்லை- அன்வார்!

 

போக்குவரத்து அமைச்சர் பதவியிலிருந்து விலகும் Anthony Lokeகின் கடிதத்தை பிரதமர் இன்னும் ஏற்றுக் கொள்ளவில்லை!

 

அதன் தொடர்பில் தாம் Lokeகுடன் பேச்சு வார்த்தை நடத்த வேண்டியிருப்பதாக அவர் கூறினார்.

 

முன்னாள் பிரதமர் DS Najib Tun Razakக்கு வீட்டுக் காவலில் இருக்க அனுமதி வழங்கப்பட்டதை அடுத்து, போக்குவரத்து அமைச்சர் பொறுப்பிலிருந்து தாம் விலகுவதாக அந்த DAP பொதுச் செயலாளர் முன்னதாக அறிவித்திருந்தார்.

 

-----

 

வெள்ளம் ஏறும் அபாயம் அதிகமுள்ள பகுதிகளை உடனடியாக அடையாளம் காணும்படி சிலாங்கூர் மாநிலத்தில் உள்ள எல்லா சம்பந்தப்பட்ட அமைப்புகளையும் உத்தரவிட்டுள்ளார் பிரதமர்.

அடைப்பட்ட வடிகாலை சுத்தப்படுத்துவது உட்பட, வெள்ள அபாயத்தைக் குறைக்கும் பல்வேறு ஆக்ககர நடவடிக்கைகளை முன்னெடுக்கவும் அவற்றுக்கு உத்தரவிடப்பட்டுள்ளது.

-----

இதனிடையே ஆகக் கடைசி தகவல்படி, சிலாங்கூரில் ஆயிரத்து 200 பேர் வெள்ளத்தால் பாதிக்கப்பட்டுள்ளன!

பேராவில் 280க்கும் அதிகமாநோர் தற்காலிக துயர் துடைப்பு மையங்களில் தங்க வைக்கப்பட்டுள்ளனர்.

----

உலகின் செல்வாக்குமிக்க ஐநூரு முஸ்லீம்கள் பட்டியலில் DSAI 13ஆம் இடத்தில் பெயர் குறிப்பிடப்பட்டுள்ளார்!

இலக்கவியல் மற்றும் பொருளாதார மாற்ற வியூகம், மற்றும் தாய்லாந்து கம்போடியே எல்லை மோதலில் சமரசம் செய்ய அவர் ஆற்றிய பங்கு ஆகியவை, அவரை அவ்விடத்திற்குக் கொண்டுச் சென்ற முக்கிய காரணிகளாகக் குறிப்பிடப்படுகின்றன.

-----

KTM Komuter சேசைக்கான MyKomuter 50 பாஸ் வரும் திங்கட்கிழமை முடுக்கிவிடப்படுகின்றன!

டிசம்பர் ஒன்று முதல் அதனைப் பயன்படுத்தி, மாதத்திற்கு ஐம்பதே ரிங்கிட் கட்டணத்தில் பொதுமக்கள் வரம்பற்ற பயணச் சேவையை அனுபவிக்கலாம்.

-----

 

தகுதிப் பெற்ற வெளிநாட்டு மாணவர்கள் மட்டுமே ஏற்றுக் கொள்ளப்படுவர்!

அதற்காக நாட்டிற்குள் நுழைய அவர்களை அனுமதிப்பதற்கு முன்னர், கடுமையான சோதனைகளைத் தமது தரப்பு மேற்கொள்ளும் என, உயர்கல்வி அமைச்சு தெரிவித்தது.

RAAGA Aaha Siranta Isai!