
சமூக பாதுகாப்பு அமைப்பு பெர்கேசோவின் கீழ் உள்ள வேலை இடமற்ற விபத்துக்களுக்கான Lindung24 திட்டத்திற்கான சந்தா இனி கட்டாயமில்லை!
அது உடனடி அமுலுக்கு வருவதாக அறிவித்துள்ளார் தொடர்புத்துறை அமைச்சர் Datuk Fahmi Fadzil.
தொழிலாளர்களின் சம்பளத்திலிருந்து 0.75 விழுக்காட்டைப் பிடித்தம் செய்யும் அந்த சந்தா இனி தன்னார்வ அடிப்படையிலேயே மேற்கொள்ளப்படும் என, அமைச்சரவை கூட்டத்தில் முடிவுச் செய்யப்பட்டுள்ளதாக அவர் கூறினார்.
இதன் தொடர்பான மேல் விவரங்களை மனிதவள் அமைச்சு வெளியிடும்.
------
இதனிடையே பொதுச் சேவை துறையினருக்கான பணி ஓய்வு பெறும் வயதை உயர்த்த திட்டமில்லை!
அது 60 வயதாகவே நிலைநிறுத்தப்படும் என அமைச்சர் தெரிவித்துள்ளார்.
-----
இன்று தொடங்கி அடுத்த ஒரு வாரத்திற்கு உதவித் தொகை வழங்கப்படாத டீசல் மற்றும் பெட்ரோலின் விலையில் மாற்றமில்லை!
ரோன்97 ரக பெட்ரோல் விலை லிட்டருக்கு 4 ரிங்கிட்டாகவும், ரோன்95 லிட்டருக்கு 3 ரிங்கிட் 37 சென்னாகவும், டீசல் விலை லிட்டருக்கு 3 ரிங்கிட் 97 சென்னாகவும் நிலைநிறுத்தப்படுகிறது.
-----
சபா, Kota Kinabaluவில் தனது இரு பிள்ளைகளும் பள்ளியில் பகடிவதைக்கு ஆளானதாக தந்தை ஒருவர் காவல் துறையில் புகார் கொடுத்துள்ளார்,
-----
கிளாந்தான் Tumpatடில், மெதுவோட்டம் சென்று கொண்டிருந்த 15 வயது பெண்ணிடம் வழிப்பறி செய்து, அவளைப் பாலியல் பலாத்காரம் செய்த சம்பவத்தின் முக்கிய சந்தேக நபரை காவல் துறை கைது செய்திருக்கிறது.