Skip to main content
மாணவர் கொலை வழக்கு மேல்முறையீடு !

 

 

மாணவர் கொலை வழக்கில், மனநிலை பாதிப்பு காரணமாக விடுவிக்கப்பட்ட 15 வயது சிறுவன் தொடர்பான தீர்ப்பு, தற்போது மேல்முறையீட்டு நீதிமன்றத்தின் பரிசீலனைக்கு செல்கிறது !

அந்த வழக்கில், சிலாங்கூர் ஷா ஆலம் உயர் நீதிமன்றம் வழங்கிய விடுதலைத் தீர்ப்பை எதிர்த்து, சட்டத்துறை அலுவலகம் மேல்முறையீடு செய்துள்ளது.

அந்த மேல்முறையீடு, செவ்வாய்க்கிழமை மேல்முறையீட்டு நீதிமன்றத்தில் தாக்கல் செய்யப்பட்டதாக சட்டத்துறை அலுவலகம் தெரிவித்துள்ளது.

உயர் நீதிமன்ற நீதிபதியின் முழுமையான தீர்ப்பை ஆராய்ந்து பரிசீலித்த பின்னரே, மேல்முறையீடு செய்ய முடிவு எடுக்கப்பட்டதாகவும் அது கூறியது.

கடந்தாண்டு அக்டோபரில், Bandar Utama பள்ளியில், மாணவரை கொலை செய்ததாக, அந்த 15 வயது சிறுவன் மீது குற்றஞ்சாட்டப்பட்டிருந்தது.

எனினும், அச்சிசிறுவன் மனநிலை பாதிப்பால் பாதிக்கப்பட்டிருந்ததாக நீதிமன்றம் ஏற்றுக்கொண்டதைத் தொடர்ந்து, உயர் நீதிமன்றம் அவரை குற்றச்சாட்டிலிருந்து விடுவித்தது குறிப்பிடத்தக்கது.

---------

மலேசியா, தொடர்ந்து பொருளாதார வளர்ச்சியைக் கண்டு வந்தாலும், அதன் பயன், சாதாரண மக்களின் வருமான உயர்வில் பிரதிபலிக்க வேண்டும் என, பொருளாதார அமைச்சு தெரிவித்துள்ளது !

அதனால், 2027 வரவுசெலவுத் திட்டத்தில், உயர்ந்த ஊதியங்களை உருவாக்கும் கொள்கைகள் மற்றும் மக்களின் வருமானத்தை மேம்படுத்தும் நடவடிக்கைகளுக்கு, முக்கியத்துவம் அளிக்கப்பட வேண்டும் என, அமைச்சு கூறியது.

அதிக வளர்ச்சி மற்றும் உயர்மதிப்பு கொண்ட தொழில்துறைகளை ஊக்குவிப்பதன் வழி, தரமான வேலைவாய்ப்புகளையும், உயர்ந்த சம்பள வாய்ப்புகளையும் உருவாக்க முடியும் என்றும் அவ்வமைச்சு சொன்னது.

-------

கிள்ளானை நோக்கிச் செல்லும் கூட்டரசு நெடுஞ்சாலையின் மோட்டார் சைக்கிள் பாதையில், பலர் விபத்துக்குள்ளானதைத் தொடர்ந்து, சேதமடைந்திருந்த சாலைப் பகுதியை, சீரமைக்க பொதுப்பணித் துறை, உடனடி நடவடிக்கை எடுத்துள்ளது !

அதோடு, அப்பகுதியில் வேகத்தைக் குறைக்க வேண்டும் எனும் எச்சரிக்கை பலகைகளும் நிறுவப்பட்டுள்ளன.

--------

பினாங்கு Jelutong-கில், மோட்டார்சைக்கிள் பின்னால், கருப்பு நாயை இழுத்துச் சென்றதாகக் கூறப்படும் இரு ஆடவர்களை, மாநில கால்நடை சேவைகள் துறை அடையாளம் கண்டுள்ளது !

அது தொடர்பான காட்சிகள் அடங்கிய காணொலி, இணையத்தில் பரவலானது.

---------

சரவாக்கில் 9 பகுதிகளில், காற்றின் தரத்தைக் குறிக்கும் API குறியீடு 100-ரைக் கடந்து, ஆரோக்கியமற்ற அளவில் உள்ளது !

RAAGA Aaha Siranta Isai!