Skip to main content
மாணவர் பாதுகாப்பே முன்னுரிமை !

 

மாணவர்களின் பாதுகாப்பையும், பகடிவதைச் சம்பவங்களைத் தடுப்பதையும் நோக்கமாகக் கொண்ட நடவடிக்கைகள், சம்பவங்கள் நடந்த பிறகு மட்டும் மேற்கொள்ளப்படுபவை அல்ல !

அவை, முன்னெச்சரிக்கை நடவடிக்கைகள் மற்றும் தற்போதுள்ள பாதுகாப்பு அமைப்புகளை வலுப்படுத்தும், தொடர்ச்சியான முயற்சிகளின் ஒரு பகுதியாக அமல்படுத்தப்பட்டு வருவதாக, கல்வியமைச்சு தெரிவித்துள்ளது.

பள்ளிகள், எப்போதும் மாணவர்களுக்கு பாதுகாப்பான இடமாக இருக்க வேண்டும் என்பதற்காக, அமைச்சு தொடர்ந்து முயற்சிகளை மேற்கொண்டு வருகிறது.

---------

ஜொகூர் தேர்தல் நாளான வரும் சனிக்கிழமை காலை, ஜொகூர் பாரு, முவார், பத்து பஹாட், பொந்தியான், தங்காக், கூலாய் ஆகிய பகுதிகளில், மழை பெய்யக்கூடும் !

மாலையில், சில பகுதிகளில் வானிலை சீராகவும், சில பகுதிகளில் மழை தூறவும் வாய்ப்புள்ளது.

----------

பஹாங் குவாந்தானில், இரட்டை மாடி வீட்டில் ஏற்பட்ட தீ விபத்தில், மாற்றுத்திறனாளியான முதியவர் ஒருவர், தீப்புகையை சுவாசித்ததால் உயிரிழந்திருக்கலாம் என நம்பப்படுகிறது !

காரணம், அவரது உடலில் தீக்காயங்கள் ஏதும் இல்லை என தீயணைப்புத் துறை தெரிவித்தது.

----------

மலாக்கா ஜாசினில் ஏற்பட்ட திடீர் வெள்ளத்தால், 2 குழந்தைகள் உட்பட, 10 பேர் காப்பாற்றப்பட்டுள்ளதாக, மீட்புக் குழு தெரிவித்துள்ளது !

----------

சிலாங்கூர் Sungai Buloh-வில் இருந்து Semenyih-வுக்கு சென்றுகொண்டிருந்த போது,  மாரடைப்புக்கு ஆளானதாகக் கூறப்படும் 64 வயது லார் ஓட்டுநர், உயிரிழந்துள்ள வேளை, அவர் ஓட்டிச் சென்ற லாரி, பின்னோக்கி நகர்ந்து, கார் ஒன்றின் மீது மோதியதாக, காவல்துறை தெரிவித்துள்ளது ! 

RAAGA Aaha Siranta Isai!