
இடைநிலைப்பள்ளி மற்றும் பொது உயர்கல்விக்கூட மாணவர்களுக்கு, 100 ரிங்கிட் புத்தகப் பற்றுச்சீட்டுகள் வழங்கப்படுகின்றன !
அவற்றை, இன்று தொடங்கி, ஜூன் 7-ஆம் தேதி வரை நடைபெறும் கோலாலம்பூர் புத்தகக் கண்காட்சியில் பயன்படுத்திக்கொள்ளலாம்.
இது, மலேசியர்களிடையே வாசிப்புப் பழக்கத்தை ஊக்குவித்து, அறிவு மேம்பாட்டை வலுப்படுத்தும் முயற்சிகளின் ஒரு பகுதியாகும்.
---------
Chan Sow Lin, LRT நிலையம் அருகே ரயில் தடம் புரண்டதால் பாதிக்கப்பட்ட Ampang - Sri Petaling இடையிலான ரயில் சேவை, புதன்கிழமை மீண்டும் தொடங்கும் என எதிர்பார்க்கப்படுகிறது !
அவ்விடத்தில் பழுதுபார்க்கும் பணிகள், 3 முதல் 5 நாட்கள் நடைபெறும் என, போக்குவரத்து அமைச்சு தெரிவித்துள்ளது.
---------
இதனிடையே, ரயில் தடம் புரண்ட சம்பவத்திற்கான மூல காரணத்தை விசாரிக்க, சுயேட்சை சிறப்பு குழுவொன்று அமைக்கப்பட்டுள்ளது.
விசாரணை நேர்மையாகவும், வெளிப்படையாகவும் நடைபெறுவதை உறுதிச் செய்ய, Prasarana உறுப்பினர்கள் யாரும், இப்பணிக்குழுவில் இடம்பெறவில்லையென, போக்குவரத்து அமைச்சு தெரிவித்துள்ளது.
-----------
மற்றவர்களின் MyKad அட்டையை, அவர்களின் அனுமதியின்றி பயன்படுத்தி, Budi95 திட்டத்தில் வழங்கப்படும் RON95 பெட்ரோலை வாங்கும் தரப்புக்கு எதிராக, நிதியமைச்சு கடுமையான எச்சரிக்கை விடுத்துள்ளது !
மானியம் வழங்கப்பட்ட அந்த பெட்ரோலை, சிலர் அனுமதி இல்லாமல் பிறரின் MyKad அட்டையைப் பயன்படுத்தி வாங்கியதாக புகார்கள் எழுந்ததை, அமைச்சு சுட்டிக்காட்டியது.
--------
கோலாலம்பூர், பேராக், Negeri Sembilan உட்பட, சில மாநிலங்களின் பெரும்பாலான பகுதிகளில், இன்றிரவு 9 மணி வரை, இடியுடன் கூடிய கனமழை பெய்யும் என, மலேசிய வானிலை ஆய்வு மையம் கணித்துள்ளது !