Skip to main content
மாணவர்களுக்கு பிரம்படி தண்டனை இன்னும் உண்டு !

 

பள்ளிகளில் மாணவர்களுக்கு பிரம்படி தண்டனை வழங்குவது ரத்து செய்யப்படவில்லை !

தற்போதுள்ள விதிமுறைகளின்படி, அந்த தண்டனை தொடர்ந்து அனுமதிக்கப்படுவதாக, கல்வியமைச்சு தெரிவித்துள்ளது.

குறிப்பிட்ட சில குற்றங்களுக்கு, ஆண் மாணவர்களுக்கு அந்தத் தண்டனை வழங்கப்படலாம்.

ஆனால், அது அதிகார வரம்புகளுக்கு உட்பட்டே வழங்கப்படும் என அமைச்சு கூறியது.

பிரம்படி தண்டனையை, பள்ளி முதல்வர், தலைமை ஆசிரியர் அல்லது அவர்களால் வெளிப்படையாக அதிகாரம் வழங்கப்பட்ட ஆசிரியர் மட்டுமே வழங்க முடியும் என்றும் அமைச்சு சொன்னது.

அந்தத் தண்டனை, கோபம் காரணமாகவோ, மாணவருக்குக் காயம் ஏற்படும் வகையிலோ வழங்கப்படக் கூடாது என்றும், ஒவ்வொரு தண்டனைக்கும் தெளிவான காரணம் இருக்க வேண்டும் என்றும் அவ்வமைச்சு வலியுறுத்தியது.

இதனிடையே, பிரம்படி தண்டனை தொடர்பான நடைமுறைகள் குறித்து, பள்ளிகள் மற்றும் பெற்றோருக்கு தொடர்ந்து தெளிவுபடுத்தப்படும்.

இதன் வழி, பள்ளிகள், பெற்றோர் மற்றும் பொதுமக்கள், அது தொடர்பான விதிமுறைகளைத் தெளிவாகப் புரிந்துகொள்ள முடியும்.

---------

மற்றொரு பக்கம், ஜொகூரில், நான்காம் படிவ மாணவர், உயிரிழந்த நிலையில் கண்டெடுக்கப்பட்ட பள்ளியின் பாதுகாப்பு நிலையான தர செயல்பாட்டு நடைமுறைகளைத் தணிக்கை செய்ய, கல்வி அமைச்சு உத்தரவிட்டுள்ளது !

முதற்கட்ட விசாரணையில், பள்ளியில் CCTV கேமராக்கள் பொருத்தப்பட்டிருந்தபோதும், அந்த மாணவர் கண்டெடுக்கப்பட்ட இடத்தை, எந்தவொரு கேமராவும் பதிவு செய்யவில்லை என்பது தெரியவந்துள்ளதே அதற்குக் காரணம்.

அதனால், பள்ளியின் பாதுகாப்பு அம்சங்கள் குறித்து முழுமையான விசாரணை நடத்தப்பட வேண்டும் என்றும் அமைச்சு கூறியுள்ளது.

வார இறுதியில், கூடுதல் வகுப்புகள் முடிந்த பின்னர், 16 வயது மாணவர், பள்ளி மண்டபத்தில் பலத்த காயங்களுடன் கண்டெடுக்கப்பட்டதைத் தொடர்ந்து, அந்நடவடிக்கை எடுக்கப்படுகிறது.

அச்சம்பவம் தொடர்பில், பல மாணவர்கள் கைதான நிலையில், 16 வயது மாணவன், 6 நாட்களுக்கு தடுப்புக்காவலில் வைக்கப்படுகிறான்.

---------

பள்ளிகளில், வெளிப்புற நடவடிக்கைகளைக் குறைப்பது, அல்லது பள்ளிகளை மூடுவது தொடர்பான காற்றுத் தர வரம்புகளை நிர்ணயிக்கும், தேசிய புகைமூட்ட நடவடிக்கைத் திட்டத்தில் குறைபாடுகள் இருப்பதை, சுற்றுச்சூழல் துறை ஒப்புக்கொண்டுள்ளது !

எல்லை தாண்டிய புகைமூட்டத்தைக் கட்டுப்படுத்தும் வகையில் முன்மொழியப்பட்டுள்ள சட்டம் தொடர்பில், அதிகாரிகள் இதுவரை அமைச்சுடன் கலந்தாலோசிக்கவில்லை என்றும், அது கூறியது.

தற்போது நாட்டில், 11 இடங்களில், காற்றின் தரம் ஆரோக்கியமற்றதாக உள்ளது.

---------

Petaling Jaya நாடாளுமன்றத் தொகுதி காலியானது குறித்து, தேர்தல் ஆணையத்துக்கு ஏற்கனவே தகவல் தெரிவிக்கப்பட்டுள்ளதாக, மக்களவை சபாநாகர் தெரிவித்துள்ளார் !

கடந்த வாரம் அத்தொகுதியின் நாடாளுமன்ற உறுப்பினர் பதவி விலகியதைத் தொடர்ந்து, அந்தத் தொகுதி காலியானது.

---------

கோலாலம்பூர், பேராக் உட்பட, சில மாநிலங்களின் பெரும்பாலான இடங்களில், இன்றிரவு 7 மணி வரைக்கும், இடியுடன் கூடிய கனமழை பெய்யும் என, மலேசிய வானிலை ஆய்வு மையம் கணித்துள்ளது !

RAAGA Aaha Siranta Isai!