Skip to main content
மார்பக புற்றுநோய்: இலவச பரிசோதனைக்கு வாருங்கள்!

 

 

 

மார்பக புற்றுநோய் ஒருவருக்கு வந்தவுடன் உடனடியாக அறிகுறிகளைக் காட்டிவிடாது!

 

ஆரம்பக் கட்டத்திலேயே தேவையான பரிசோதனைகளை மேற்கொண்டு, புற்றுநோய் இருக்கிறதா என்பதை கவனிக்க வேண்டியது அவசியம் என்கிறார், தேசிய புற்றுநோய் சிகிச்சை கழகத்தைச் சேர்ந்த அவினாஷ் நாச்சியப்பன்...

 

Pink October எனப்படும், மார்பக புற்றுநோய் விழிப்புணர்வு மாதத்தை ஒட்டி, NCSM ஏற்பாடு செய்துள்ள இலவச மார்பக புற்றுநோய் பரிசோதனைச் சேவை குறித்தும் அவினாஷ் பேசினார்.

 

தலைநகர் TBS பேருந்து நிலையத்தில் இவ்வாரம் நடைபெறும் இந்த இலவச மார்பக புற்றுநோய் பரிசோதனை, மேற்கொள்ளப்படும் நேரம் உள்ளிட்ட மேல் விவரங்களுக்கு NCSM அகப்பக்கத்தை வலம் வாருங்கள். 

 

-----

KLலிலும் சிலாங்கூரிலும் இருக்கும் எல்லா பள்ளிகளும் நாளை வழக்கம் போல் செயல்படும்!

 

எனினும் புகைமூட்ட நிலவரத்தால் முன்னெச்சரிக்கையாக வெளிநடவடிக்கைகள் தடைச்செய்யப்படுகின்றன என கல்வி அமைச்சு தெரிவித்துள்ளது.

 

------ 

Franceசிலும் இத்தாலியிலும் உள்ள மாணவர்களின் நிலையை உயர்கல்வி அமைச்சு அணுக்கமாகக் கண்காணிக்கிறது!

 

Franceசில் சில இடங்களில் கலவரம் மூண்டு அதனால் பொது பாதுகாப்புக்கு அச்சுறுத்தல் ஏற்பட்டுள்ள நிலையில், இப்போதைக்கு அங்குள்ள மலேசிய மாணவர்கள் பாதுகாப்பாக இருப்பதாக அவ்வமைச்சு கூறியது.

 

------- 

 

சிலாங்கூர், Dengkilலில் உள்ள பள்ளி ஒன்றில் ஒன்றாம் ஆண்டு மாணவி மூச்சுத்தினறலால் உயிரிழந்த சம்பவம் நிகழ்ந்துள்ளது!

 

அதனை திடீர் மரணமாக வகைப்படுத்திய செப்பாங் காவல் துறை, சம்பவத்திற்கான காரணம் குறித்து தொடர்ந்து விசாரித்து வருகிறது.

 

----

 

டுரியான் பழங்களை தரை வழியாக சீனாவிற்கு அனுப்பும் பரிந்துரை தொடர்பில் தாய்லாந்து, லாவோஸ், வியட்னாம் கம்போடியா ஆகியவற்றுடன் கலந்து பேசி வருகிறது மலேசியா!

 

கலந்துரையாடலில் நல்ல முன்னேற்றம் காணப்படுவதாக, விவசாயம் மற்றும் உணவு பாதுகாப்பு அமைச்சு கூறியது.

 

RAAGA Aaha Siranta Isai!