
குறைந்த வருமானம் பெரும் குடும்பங்களைச் சேர்ந்த பெண்கள் பெரும்பாலும் மார்பக புற்றுநோய் மற்றும் அதன் அறிகுறிகளை தீவிரமாக எடுத்துக் கொள்வதில்லை!
அதற்கு அவர்களின் நிதி நிலையும் ஒரு காரணம் என்றால் மறுக்க முடியாது என்கிறார் தேசிய புற்றுநோய் சிகிச்சை கழகத்தைச் சேர்ந்த அவினாஸ் நாச்சியப்பன்.
Pink October எனப்படும் மார்பக புற்றுநோய் விழிப்புணர்வு மாதத்தை ஒட்டி, Astro Audio செய்தி பிரிவு நடத்திய நேர்க்காணலில் அவர் அத்தகவல்களை பகிர்ந்துக் கொண்டார்.
மார்பக புற்றுநோய்க்கு உங்களைப் பரிசோதித்துக் கொள்ள ஆர்வமா? இன்று தொடங்கி வரும் வெள்ளிக்கிழமை வரை தலைநகர் TBS பேருந்து நிலையத்தில் NCSM ஏற்பாடு செய்துள்ள இலவச மார்பக புற்றுநோய் சிகிச்சை சேவையை நாடுங்கள்.
மேல் விவரங்களுக்கு NCSM அகப்பக்கத்தை வலம் வரலாம்.
-----
சிலாங்கூர், KL, நெகிரி செம்பிலான், மலாக்கா, பஹாங், பினாங்கு ஆகிய மாநிலங்களில் உள்ள பள்ளிகள் இன்று மீண்டும் திறக்கப்படுகின்றன!
புகைமூட்டத்தால் மூடப்பட்ட அப்பள்ளிகள் இன்று மீண்டும் வழக்கம் போல் செயல்படத் தொடங்கினாலும், வெளி நடவடிக்கைகள் தொடர்ந்து தடைச் செய்யப்பட்டுள்ளன.
மாணவர்கள் சுவாசக் கவசம் அணிந்து வர ஊக்குவிக்கப்படுவதாக, அந்தந்த மாநில கல்வித் துறை அறிக்கை வழி தெரிவித்துள்ளது.
------
இதனிடையே ஆகக் கடைசி தகவல்படி நாட்டின் 27 பகுதிகளில் காற்றின் தரம் ஆரோக்கியமற்ற அளவில் பதிவாகியிருக்கின்றது!
சிலாங்கூர், நெகிரி செம்பிலான், மலாக்கா, KL, Putrajaya உள்ளிட்ட மாநிலங்கள் பாதிக்கப்பட்டுள்ளன.
-------
Mumbaiயின் JUHU பகுதியில் bollywood நடிகர் டைகர் ஷ்ராஃப் சென்ற கார் மீது மர்ம நபர்கள் துப்பாக்கிச் சூடு நடத்தியதில், அவர் உயிர் தப்பினார்.
ஓட்டுநர் உள்ளிட்ட இருவர் காயமடைந்த நிலையில், தாக்குதலுக்கான காரணம் குறித்து காவல்துறையினர் விசாரித்து வருகின்றனர்.
-------
Franceசுக்கு அத்யாவசியம் இல்லாத பயணங்களைத் தவிர்க்குமாறு மலேசியர்களை அறிவுறுத்தியிருக்கிறது வெளியுறவு அமைச்சு!
அந்நாட்டின் பல்வேறு பகுதிகளில் நிலவி வரும் கலவரங்களை அடுத்து, பாதுகாப்பு அச்சுறுத்தல் இருப்பதால், நிலைமை சரியாகும் வரை அங்கு செல்வதைத் தவிர்த்துக் கொள்ளும்படி கேட்டுக் கொள்ளப்பட்டுள்ளது.