
2023-ஆம் ஆண்டுக்கு முந்தைய மூன்றாண்டுகளில், 40 வயதுக்கு மேற்பட்ட மலேசியப் பெண்களில், 12.8 விழுக்காட்டினர் மட்டுமே மார்பகப் புற்றுநோயைக் கண்டறியும் பரிசோதனை செய்துகொண்டுள்ளனர் !
2019-ஆம் ஆண்டில் அந்த எண்ணிக்கை 21 விழுக்காடாக இருந்தது.
பரிசோதனை குறித்த அச்சமும், விழிப்புணர்வு இல்லாமையும், அதற்குக் காரணங்களாக இருக்கலாம் என, மகளிர், குடும்ப, சமூக மேம்ப்பாட்டு அமைச்சு தெரிவித்துள்ளது.
இவ்வேளையில், மேமோகிராம் பரிசோதனைக்கான மானியத் திட்டத்தின் நிதி ஒதுக்கீடு, இவ்வாண்டு 80 லட்சம் ரிங்கிட்டிலிருந்து, 2027-ஆம் ஆண்டுக்கான வரவு செலவுத் திட்டத்தில், 9 மில்லியன் ரிங்கிட்டாக உயர்த்தப்பட்டுள்ளது.
இதன் வழி, சுமார் 38 ஆயிரம் பெண்கள் பயனடைவர் என எதிர்பார்க்கப்படுவதாகவும் அமைச்சு கூறியது.
--------
ஐரோப்பாவின் சில நாடுகளில், குறிப்பாக பிரான்ஸ் தலைநகர் Paris-சில், தற்போது நடைபெற்று வரும் போராட்டங்கள் குறித்து, மலேசியா உன்னிப்பாகக் கண்காணித்து வருகிறது !
பிரான்சின் கல்வி வரவு செலவுத் திட்டம் தொடர்பான விவகாரங்களைக் கண்டித்து, பாரிஸில் நடைபெறும் போராட்டங்கள் குறித்து மலேசிய வெளியுறவு அமைச்சு, அங்குள்ள மலேசியத் தூதரகம் மூலம், நிலைமையைக் கண்காணித்து வருவதாக, வெளியுறவு அமைச்சு தெரிவித்துள்ளது.
பாரிஸில் உள்ள மலேசியத் தூதரகம், தற்போதைய நிலவரங்கள் குறித்த தகவல்களைச் சேகரித்து, ஆய்வு செய்து வரும் வேளை, அங்கு வசிக்கும் மலேசியர்களின் நிலை குறித்தும் கவனம் செலுத்தி வருகிறது.
---------
மலேசிய எல்லைக் கட்டுப்பாடு, பாதுகாப்பு நிறுவனத்தின் தலைமை இயக்குநர் Datuk Seri Mohd Shuhaily Mohd Zain, மாறாக அறிவிப்பு வரும் வரை, வழக்கம்போல் தனது பணிகளைத் தொடர்ந்து மேற்கொள்வார் !
உள்துறை அமைச்சு அல்லது பொது சேவைத் துறையின் நிர்வாக நடைமுறைகள் மற்றும் விதிமுறைகளுக்கு உட்பட்டே, அவரது பதவி தொடர்பான எந்தவொரு முடிவும் அமையும் என, அவரது வழக்கறிஞர் தெரிவித்துள்ளார்.
கடந்த மாதம், சிறப்புப் பிரிவு காவல்துறை அதிகாரிகள் இருவரை, வேண்டுமென்றே காயப்படுத்தியதாக, தம்மீது நீதிமன்றத்தில் சுமத்தப்பட்ட 2 குற்றச்சாட்டுகளையும், Datuk Seri Mohd Shuhaily மறுத்தார்.
---------
குற்றவாளிகள் மற்றும் விரும்பத்தகாத நபர்களைப் பதிவு செய்யும் 2026 சட்டத் திருத்த மசோதா, இன்று மக்களவையில் முதல் வாசிப்புக்காகத் தாக்கல் செய்யப்பட்டது !
பழைய குற்றப் பதிவுகளை நீக்கும் நடைமுறையை அறிமுகப்படுத்தும் இந்த மசோதா, குறிப்பிட்ட நிபந்தனைகளைப் பூர்த்தி செய்யும் முன்னாள் குற்றவாளிகளுக்கு, மீண்டும் ஒரு வாய்ப்பை வழங்குவதை நோக்கமாகக் கொண்டுள்ளது என, உள்துறை அமைச்சர் தெரிவித்துள்ளார்.
---------
சிலாங்கூர், மலாக்கா, ஜொகூர் உள்ளிட்ட மாநிலங்களின் 20 பகுதிகளில், காற்றின் தரத்தைக் குறிக்கும் API குறியீடு, 100-ரைக் கடந்து, ஆரோக்கியமற்ற அளவில் உள்ளது !