Skip to main content
மேல் சுவாசக் குழாய் தொற்று பாதிப்புகள் அதிகரிப்பு !

 

புகைமூட்டம் காரணமாக, அண்மைய காலத்தில், மேல் சுவாசக் குழாய் தொற்று பாதிப்புகள், 167 விழுக்காடு அதிகரித்துள்ளதாக, சுகாதார அமைச்சு தெரிவித்துள்ளது !

அதே காலகட்டத்தில், ஆஸ்துமா பாதிப்புகளும் அதிகரித்துள்ள வேளை, புகைமூட்டத்துடன் தொடர்புடைய இதர நோய்களும் உயர்ந்துள்ளதாக, அமைச்சு கூறியது.

எனவே, பொதுமக்கள், காற்றின் தரத்தைக் குறிக்கும் API குறியீட்டின் அண்மைய நிலவரத்தைத் தொடர்ந்து கண்காணிப்பதுடன், அதிகாரிகள் வெளியிடும் சுகாதார ஆலோசனைகளையும் பின்பற்றும்படி, அமைச்சு வலியுறுத்தியது.

--------

இதனிடையே, நாடு முழுவதும் உள்ள சுகாதார நிலையங்களில், மருத்துவ உபகரணங்களின் கையிருப்பைச் சுகாதார அமைச்சு அதிகரித்துள்ளது !

புகைமூட்டத்தால் ஏற்படக்கூடிய நோய்கள், பொதுமக்களின் ஆரோக்கியத்தைப் பாதிக்கும் அபாயம் உள்ளதே அதற்குக் காரணம்.

சுவாசப் பிரச்சினைகள் தொடர்பான நோயாளிகளின் எண்ணிக்கை அதிகரிக்கக்கூடும் என்பதைக் கருத்திற்கொண்டு, அந்நடவடிக்கை முன்னெடுக்கப்பட்டதாக அமைச்சு கூறியது.

---------

மேலும் சில செய்திகள் சுறுக்கமாக ;

புகைமூட்டம் தொடர்பான செய்திகளைத் தொடர்கிறது.

சிலாங்கூரில் உள்ள அனைத்துப் பள்ளிகளும், நாளை வழக்கம்போல் செயல்படும்.

இருப்பினும், அனைத்து வெளிப்புற நடவடிக்கைகளும் ஒத்திவைக்கப்படுகின்றன.

தலைநகரில் உள்ள அனைத்துப் பள்ளிகளும், நாளை வழக்கம்போல் செயல்படும்.

பகாங்கில் உள்ள அனைத்துப் பள்ளிகளும் நாளை வழக்கம்போல் செயல்படும்.

இவ்வேளையில், Negeri Sembilan, பஹாங் என, சில மாநிலங்களின் 37 பகுதிகளில், API குறியீடு 100-ரைத் தாண்டி, ஆரோக்கியமற்ற அளவில் உள்ளது.  

---------

ஜொகூர் Yong Peng-கில் உள்ள பள்ளியில், மாணவர் ஒருவர் கொலையுண்ட நிலையில் கண்டெடுக்கப்பட்ட சம்பவம் தொடர்பில், 16 வயது வாலிபன், நீதிமன்றத்தில் குற்றஞ்சாட்டப்பட்டுள்ளான் !

--------

கெடா Gurun-னில் உள்ள Golf Club-பில், 19 வயது நபர் கொலை செய்யப்பட்ட சம்பவம் தொடர்பில், 14 பேர், நீதிமன்றத்தில் குற்றஞ்சாட்டப்பட்டுள்ளனர் !

RAAGA Aaha Siranta Isai!