
அமெரிக்காவின் ஆதரவுடன் ஈரான் மீது இஸ்ரேல் நடத்தும் தாக்குதலை உடனடியாக நிறுத்த, பிரதமர் டத்தோ ஸ்ரீ அன்வார் இப்ராஹிமும், இந்திய பிரதமர் நரேந்திர மோடியும் அழைப்பு விடுத்துள்ளனர் !
நேற்றிரவு, அவ்விரு தலைவர்களும் தொலைபேசியில் அது குறித்து பேசினர்.
அதையடுத்து, அந்த போர் நடவடிக்கைகளை மலேசியா வன்மையாகக் கண்டிப்பதாக, டத்தோ ஸ்ரீ அன்வார் கூறினார்.
அதே சமயம், பிரதமர் மோடி, டத்தோ ஸ்ரீ அன்வாருக்கும், நாட்டு மக்களுக்கும், நோன்புப் பெருநாள் வாழ்த்துகளைத் தெரிவித்துக்கொண்டார்.
--------
இதனிடையே, நோன்பு பெருநாளுக்கான சோதனை நடவடிக்கையின் போது, டிரோன் கேமிரா மூலமாக, ஈராயிரத்துக்கும் மேற்பட்ட போக்குவரத்து குற்றச்செயல்கள் பதிவுசெய்யப்பட்டுள்ளன !
இரட்டை கோட்டை மீறியது, சமிக்ஞை விளக்கை பின்பற்றாதது போன்ற குற்றங்களும் அதிலடங்குமென, சாலை போக்குவரத்து துறை தெரிவித்துள்ளது.
---------
நாடு முழுவதும் உள்ள முஸ்லிம் அன்பர்கள் நாளை நோன்புப் பெருநாளைக் கொண்டாடுகின்றனர் !
முத்திரை காப்பாளர் நேற்றிரவு அதனை அறிவித்தார்.
-------
Apple தொலைப்பேசி பயனர்கள், தங்கள் iOS சாதனங்களை, உடனடியாகப் புதுப்பிக்கும்படி அறிவுறுத்தப்பட்டுள்ளனர் !
Apple வெளியிட்டுள்ள புதிய பாதுகாப்பு குறித்த தகவலில், “DarkSword” எனப்படும் பாதுகாப்பு குறைபாடு உள்ளிட்ட பல்வேறு பிரச்சனைகளை சரிசெய்யும் நடவடிக்கைகள் அடங்கியுள்ளதால், அதனை விரைவில் புதுப்பிகும்படி MCMC கேட்டுக்கொண்டுள்ளது.
----------
மலாக்கா ஜாசினில், கர்ப்பிணி மனைவியை கடுமையாகத் தாக்கி காயமடைய வைத்த 22 வயது கணவன் கைது செய்யப்பட்டுள்ளான் !