
சொத்துகளை அறிவிக்கத் தவறியதாக தம்மீது சுமத்தப்பட்ட குற்றச்சாட்டை மறுத்துள்ளார் முன்னாள் பிரதமர் Datuk Seri Ismail Sabri Yaakob!
குற்றம் நிரூபிக்கப்பட்டால் அவருக்கு ஐந்தாண்டுகள் சிறை, ஒரு லட்சம் ரிங்கிட் வரை அபராதம் விதிக்கப்படலாம்.
வெளிநாட்டு நாணயம், நகைகள், தங்கக் காசுகள் என மில்லியன் கணக்காண சொத்துக்களை அவர் மலேசிய ஊழல் ஒழிப்பு ஆணையத்திடம் அறிவிக்கத் தவறியதாக அவர் மீது குற்றம் சுமத்தப்பட்டது.
Datuk Seri Najib Razak, Tan Sri Muhyiddin Yassin-னுக்கு அடுத்து, நீதிமன்ற குற்றச்சாட்டை எதிர்நோக்கும் மூன்றாவது முன்னாள் பிரதமர் Ismail Sabri என்பது குறிப்பிடத்தக்கது.
அதுவும், அம்மூவரும் ஒரே நேரத்தில் வெவ்வேறு வழக்கு விசாரணைக்காக KL உயர்நீதிமன்றத்திற்கு வந்திருந்தனர்.
------
நேப்பால் பெருவெள்ளத்தை அடுத்து தொடர்புக் கொள்ள முடியாமல் போன மலேசியர்களின் எண்ணிக்கை 50ஆக உயர்ந்துள்ளது!
அங்குள்ள மலேசியர்களை கண்டுபிடிக்கவும் அவர்களைப் பற்றிய தகவல்களை சேகரிக்கவும் Kathmanduவில் உள்ள மலேசிய தூதரகம் கடினமாக உழைத்து வருகிறது.
நேப்பாலில் வெள்ளம் நிலச்சரிவால் உயிரிழந்தோரின் எண்ணிக்கை குறைந்தது 160 ஆகும்.
------
இதனிடையே நேப்பாலுக்கு மனிதநேய உதவுகளை வழங்க மலேசிய ராணுவம் தயாராக இருக்கின்றது!
எனினும் இறுதி முடிவு, அரசாங்கத்தைப் பொருத்தது என, தற்காப்பு அமைச்சர் தெரிவித்திருக்கின்றார்.
-------
ஆகக் கடைசி தகவல்படி, நாட்டில் ஐந்து பகுதிகளில் காற்றுத் தர குறியீடு ஆரோக்கியமற்ற அளவில் பதிவாகியிருக்கிறது.
சரவாக்கின் Serian, Samarahan, Sri Aman, KL, சிலாங்கூர், Johan Setia ஆகிய இடங்கள் அவற்றுள் அடங்கும்.