
குடியிருப்புகளுக்கான மின்சார உதவித் தொகை வரம்பை மணிக்கு 600 Kilowatடிலிருந்து அரசாங்கம் மணிக்கு 800கிலோவாட்டாக உயர்த்தியுள்ளது.
இச்சலுகை டிசம்பர் 31ஆம் தேதி வரை நீட்டிக்கப்படுவதாக பிரதமர் அறிவித்துள்ளார்.
------
நேற்று வெளியான புதிய Mykad அடையாள அட்டைக்கு பொதுமக்களிடமிருந்து ஏகமித்த ஆதரவு கிடைத்து வருகிறது!
வழக்கமாக நாளுக்கு நூரு பேர் அடையாள அட்டையைப் புதுப்பிப்பதற்காக Putrajaya தேசிய பதிவுத் துறை அலுவலகத்திற்கு வருவர் என்றும், நேற்றோ முன்னூருக்கும் மேற்பட்டோர் காலையிலேயே திரண்டதாகவும், அத்துறையின் அட்டை பிரிவு இயக்குனர் தெரிவித்தார்.
அடையாள அட்டையை வெளியிடும் நடைமுறைகளும் 30 நிமிடங்கள் முதல் 1 மணி நேரத்திற்குள் சுமூகமாக மேற்கொள்ளப்பட்டன என்றார் அவர்.
-----
இதனிடையே புதிய Mykad அட்டையால் அரசாங்கத்தின் மானியங்களில் எந்த பாதிப்பும் இருக்காது என மீண்டும் உத்தரவாதம் அளித்துள்ளது JPN!
வழக்கம் போல் அவ்வட்டைகளை பொதுமக்கள் அரசாங்கத்தின் உதவித் திட்டங்கள், பெட்ரோல் மானியம், கழிவுகள் உள்ளிட்டவற்றிற்குப் பயன்படுத்தலாம்.
அட்டையில் இருந்த ரஹ்மா அடிப்படை உதவித் திட்டத்திற்கான பாக்கித் தொகையிலும் எந்த பாதிப்பும் இருக்காது.
------
ஆகக் கடைசி தகவல்படி நாட்டின் 34 பகுதிகளில், காற்றின் தரத்தை குறிக்கும் API குறியீடு ஆரோக்கியமற்ற அளவில் பதிவாகியிருக்கிறது!
அப்பகுதிகள் அனைத்தும், சரவாக், சிலாங்கூர், KL, Negeri Sembilan, Putrajaya, Pahang, Kedah, Johor, Melaka ஆகிய மாநிலங்களைச் சேர்ந்தவை.
------
தலைநகரில் 49 ஹெக்டர் ைநிலப்பரப்பிலான புதிய பொழுதுபோக்கு இடங்கள் மற்றும் பொதுப் பூங்காக்களை KL மாநகர் மன்றம் அமைக்கவிருக்கிறது!
தலைநகரின் குடிமக்களுக்கு பசுமையான பகுதிகள் மற்றும் ஓய்வு வசதிகளின் வலையமைப்பை மேம்படுத்தும் முயற்சியாக இது அமைகிறது என, பிரதமர் துறையின் கூட்டரசு பிரதேச அமைச்சர் தெரிவித்தார்.