
மியான்மர் அதிபர், 2 நாள் அதிகாரப்பூர்வப் பயணமாக இன்று மலேசியா வந்தடைந்துள்ளார் !
மலேசியாவில் உள்ள மியான்மர் நாட்டவர்களை மீண்டும் அந்நாட்டுக்கு அனுப்புவது தொடர்பான விவகாரம், பிரதமர் Datuk Seri Anwar Ibrahim உடனான சந்திப்பில் முக்கியமாக விவாதிக்கப்படும் என எதிர்பார்க்கப்படுகிறது.
இந்தப் பயணம், மியான்மருடன், பிரதமர் நேரடியாகத் தொடர்ந்து பேச்சுவார்த்தை நடத்துவதற்கான வாய்ப்பை வழங்கும் என, Wisma Putra தெரிவித்துள்ளது.
இவ்வாண்டு மே மாதம் நடைபெற்ற 48-ஆவது ASEAN உச்சநிலை மாநாட்டின் முடிவுக்கு ஏற்ப, மியான்மர் விவகாரத்தில் ஆக்கப்பூர்வமான மற்றும் கொள்கை அடிப்படையிலான அணுகுமுறையைத் தொடரும் வகையில், இந்தச் சந்திப்பு அமையும் என்றும் தெரிவிக்கப்பட்டுள்ளது.
----------
குழந்தைகள் மற்றும் பதின்ம வயதினரைச் சார்ந்த பகடிவதைச் சம்பவங்களைத் தீர்க்கும் தனிப்பட்ட வழியாக, பகடிவதை தடுப்பு நடுவர் மன்றம் குறித்து அதிக விழிப்புணர்வு ஏற்படுத்தப்பட வேண்டும் !
பள்ளிகள் உரிய நடவடிக்கை எடுக்கத் தவறினால், பாதிக்கப்பட்டவர்கள் புகார் அளிக்க, மாற்று வழி உள்ளது என்பதை அறிந்துகொள்ள இது உதவும் என, சட்ட சீர்திருத்தப் அமைச்சு கூறியது.
---------
KLIA Aerotrain சேவை, திட்டமிடப்பட்ட மென்பொருள் புதுப்பிப்பு பணிகளுக்காக, நாளை முதல் 17-ஆம் தேதி வரை, தினமும் நள்ளிரவு 12 மணி முதல், அதிகாலை 5 மணி வரை தற்காலிகமாக நிறுத்தப்படும் !
நவம்பரிலும், Aerotrain சேவை தற்காலிகமாக நிறுத்தப்படும்.
--------
கோலாலம்பூர், Negeri Sembilan, Johor உட்பட, நாட்டின் 27 இடங்களில், காற்றின் தரத்தைக் குறிக்கும் API குறியீடு, 100-ரைக் கடந்து, ஆரோக்கியமற்ற அளவில் பதிவாகியுள்ளது !
---------
தொலைக்காட்சி மற்றும் வானொலியில் செய்தி வாசிக்கும் கனவுடைய எட்டு முதல் 12 வயதுக்குட்பட்ட மாணவர்களுக்காக Astro உலகம் ஏற்பாட்டில் தொடங்கியுள்ளது இளம் செய்தி வாசிப்பாளர் தேடல்!
ஐந்து முதன்மை வெற்றியாளர்களுக்குத் தலா ஆயிரம் ரிங்கிட் ரொக்கப் பரிசுடன், Astro செய்திகள் மற்றும் Astro Audio செய்திகளில் செய்தி வாசிக்கும் வாய்ப்பும் கிடைக்கும்; தமிழ்ச் செய்தி வாசிப்பாளர்களை நேரில் சந்திக்கும் வாய்ப்பும் உண்டு.
விண்ணப்பத்திற்கும், மேல் விவரங்களுக்கும் Astro ulagam அகப்பக்கத்தை வலம் வாருங்கள்.