Skip to main content
மக்கள் Time of Use திட்டத்திற்கு மாற வேண்டும் !

நாட்டின் எரிசக்தி பயன்பாட்டின் செயல்திறனை வலுப்படுத்தும் ஒரு முயற்சியாக,  பொதுமக்கள் Time of Use (ToU) திட்டத்திற்கு மாற வேண்டும் ! 

அவ்வாறு, எரிசக்தி மாற்றம் மற்றும் நீர் உருமாற்றத் துறை அமைச்சு அறிவுறுத்தியுள்ளது. 

பிற்பகல் மணி 2 முதல் இரவு மணி 10 வரை எரிசக்தி பயன்பாட்டின் உச்ச நேரங்களாகக் கருதப்படுகின்றன. 

அந்நேரங்களில், பொதுவாகக் கட்டண விகிதங்களும் அதிகமாக இருக்கும் என அது கூறியது. 

எனவே,ToU திட்டத்தின் மூலம், பயனர்கள் குளிரூட்டிப் பயன்பாடு போன்ற அதிக ஆற்றல் தேவைப்படும் சாதனங்களை, உச்ச நேரங்கள் அல்லாத மற்ற நேரங்களுக்கு மாற்றுவதன் மூலம் எரிசக்தி சேமிப்பை அதிகரிக்க முடியும் என அமைச்சு விளக்கியது. 

--

 

நாட்டில் மருந்துகள் மற்றும் சுகாதார சாதனங்கள் 40% விலையேற்றம் கண்டுள்ளதை, சுகாதார அமைச்சு கண்காணித்து வருகிறது ! 

 

மத்திய கிழக்கு பகுதிகளில் நிலவி வரும் பதட்டகளினால் அதிகரித்துள்ள விநியோகச் சங்கிலிகளின் செலவுகளே அதற்கு காரணம் என சுகாதார அமைச்சர் Datuk Seri Dr Dzulkefly Ahmad தெரிவித்துள்ளார். 

 

என்றாலும், ஜூன் மாத இறுதி வரை நாட்டில் மருந்துகளின் விநியோகம் நிலையானதாகவும் போதுமானதாகவும் இருக்கும் என அவர் உறுதியளித்தார். 

 

-- 

 

ஏழு மலேசியக் கப்பல்களில் ஆறு, ஹோர்முஸ் நீரிணையை  வெற்றிகரமாகக் கடந்து, நாட்டிற்குக் கச்சா எண்ணெய் விநியோகத்தைக் கொண்டுவரச் சென்று கொண்டிருப்பதாகப் பிரதமர் அறிவித்துள்ளார். 

  

மற்றொரு கப்பல் சேதம் காரணமாகத் துறைமுகத்தில் சிக்கியுள்ளது. 

 

-- 

 

வெப்ப வானிலையைத் தணிக்கும் முயற்சியாக, நாடு தழுவிய அளவில் மேக விதைப்பு நடவடிக்கைகளைச் செயல்படுத்த தேசிய பேரிடர் நிர்வாகக் குழு NADMA தயாராக உள்ளது. 

 

அது, அணைகளின் நீர்மட்டம் நிலையாக இருப்பதை உறுதி செய்யும் ஒரு முயற்சியாக, அமையும் என்றும் NADMA, கூறியது. 

  

பருவகால மாற்றங்களினால்,  மே அல்லது ஜூன் மாதம் வரை வெப்பம் மற்றும் வறட்சி நிலவும் என எதிர்பார்க்கப்படுகிறது. 

 

-- 

 

தலைநகர் Cheras-சில் பொழுதுபோக்கு மையம் ஒன்றில், கடந்த ஞாயிற்றுக்கிழமை நிகழ்ந்த கலவரத்தில் தொடர்புடையதாக நம்பப்படும் 34 பேர் மீது இன்று நீதிமன்றத்தில் குற்றம் சாட்டப்பட்டது.  

  

32 பேருக்கு தலா 3,000 ரிங்கிட் அபராதம், மற்ற 2 பேருக்கு தலா இரண்டாயிரம் ரிங்கிட் அபராதம் விதிக்கப்பட்டது. 

 

 

 

RAAGA Aaha Siranta Isai!