Skip to main content
மழைக்காலத்தில் ஆறுகள், அருவிகளைத் தவிர்க்கவும்!

 

இந்த மழைக்காலத்தில் ஆறுகள் அல்லது அருவிப் பகுதிகளில் கேளிக்கை நடவடிக்கைகளுக்குத் திட்டமிட்டிருப்போர், அவற்றை ஒத்தி வைக்க அறிவுறுத்தப்பட்டுள்ளது!

எதிர்ப்பாரா கனமழையால் வெள்ளப் பெருக்கு ஏற்படும் அபாயம் இருப்பதால், அப்பகுதிகளை இப்போதைக்குத் தவிர்த்துக் கொள்ளுமாறு தீயணைப்பு மீட்புத் துறை பொதுமக்களைக் கேட்டுக் கொண்டுள்ளது.

இதனை மெத்தமனமாக எடுத்துக் கொள்வது உயிரிழப்புக்குக் கூட வித்திடும் என்பதால், கூடுதல் எச்சரிக்கையுடன் இருக்குமாறு அது எச்சரித்தது.

அண்மையில் சிலாங்கூர் Kuala Kubu Bharuவில் எண்மர் நீரில் அடித்துச் செல்லப்பட்ட சம்பவத்தை அது சுட்டிக் காட்டியது.

அச்சம்பவத்தில் பாதிக்கப்பட்ட ஐவரது உடல்களே இதுவரை கண்டுபிடிக்கப்பட்டுள்ளன.

-----

ஆகக் கடைசி தகவல்படி சிலாங்கூரில் வெள்ளத்தால் பாதிக்கப்பட்டோரின் எண்ணிக்கை தொள்ளாயிரத்து 20ஆக உயர்ந்துள்ளது.

நேற்றிரவு அங்கி எண்ணூரு பேர் மட்டுமே பாதிக்கப்பட்டிருந்தனர்.

பேராவில் முன்னூற்று என்பது பேர் தற்காலிக துயர் துடைப்பு மையங்களில் தங்க வைக்கப்பட்டுள்ளனர்.

-----

நேற்று நடந்து முடிந்த மலாக்கா மாநில தேர்தலுக்கான முன்கூட்டியே வாக்களிப்பில் கிட்டத்தட்ட 95 விழுக்காட்டினர் வாக்களித்திருப்பதாக தேர்தல் ஆணையம் தெரிவித்துள்ளது.

------ 

SRC International வழக்கில், தமக்கு எஞ்சியுள்ள சிறைதண்டனையை, தலைநகர் Jalan Langgak Dutaவில் அமைந்துள்ள தனது வசிப்பிடத்திலேயே கழிக்க, நேற்று வீடு திரும்பினார் முன்னாள் பிரதமர் Datuk Seri Najib Tun Razak.

-----

அடுத்தாண்டு ஜூன் தொடங்கி கைப்பேசி தொடர்பில் பள்ளிகளில் கடுமையான கட்டுப்பாடுகளை விதிக்க பரிசீலிக்கிறது இங்கிலாந்து!

பள்ளி நேரங்களில் சட்டைப் பைகளிலோ அல்லது புத்தக பைகளிலோ மாணவர்கள் கைப்பேசிகளை வைத்திருக்கக் கூடாது உள்ளிட்டவையும் அதிலடங்கும்.

RAAGA Aaha Siranta Isai!