
பேராக் Gunung Batu Putih-வில் மலையேறி காணாமல் போன பெண்ணை தேடும் நடவடிக்கையில், பொதுமக்கள் பங்கேற்க அனுமதி இல்லை !
அனுபவமற்ற பொதுமக்கள் அதிக அளவில் அந்தப் பகுதியில் நுழைந்தால், புதிய தடயங்களை விட மேலும் விபத்துகள் அல்லது சிக்கல்கள் ஏற்படும் அபாயம் உள்ளது என, மலேசிய மலையேறும் சங்கம் தெரிவித்துள்ளது.
எனவே, பாதுகாப்பு காரணங்களுக்காகவே அம்முடிவு எடுக்கப்பட்டதாக, அச்சங்கம் கூறியது.
கடந்த மாத இறுதியில், சம்பந்தப்பட்ட பெண், மலையேறச் சென்று காணாமல் போயுள்ளார்.
அதனால், அப்பெண்ணை தேடி மீட்கும் நடவடிக்கைக்கு வழிவிட ஏதுவாக, அம்மலை தற்காலிகமாக மூடப்பட்டது.
---------
ஜொகூர் Simpang Renggam மரண விபத்து தொடர்பில் காவல்துறை பிணையில் விடுவிக்கப்பட்ட இளைஞன் மீண்டும் பிடிப்பட்டு, தடுத்து வைக்கப்பட்டுள்ளான் !
மேற்கட்ட விசாரணைக்கு உதவ, அந்த 19 வயது வாலிபன், 4 நாட்களுக்குத் தடுத்து வைக்கப்படுகிறான்.
இம்மாத முதல் நாளில், அவன் அவ்விபத்தை ஏற்படுத்தியதாகக் கூறப்படுகிறது.
அந்த கோர விபத்தில், 10 வயது சிறுமி உட்பட, ஒரே குடும்பத்தைச் சேர்ந்த நால்வர் உயிரிழந்தனர்.
----------
மேலும் சில செய்திகள் சுறுக்கமாக ;
சிலாங்கூர் சுபாங் ஜயாவில் உள்ள தனியார் பல்கலைக்கழக வளாகம் பாதுகாப்பானதாக இருப்பதாக அறிவிக்கப்பட்டுள்ளது !
நேற்றிரவு வெடிகுண்டு மிரட்டலை அடுத்து மேற்கொள்ளப்பட்ட பாதுகாப்பு சோதனைகளுக்குப் பிறகு, அப்பல்கலைக்கழகம் பாதுகாப்பானது என உறுதிப்படுத்தப்பட்டது.
---------
இதனிடையே, அந்த வெடிகுண்டு மிரட்டலால், சுபாங் ஜயாவில் உள்ள இன்னொரு தனியார் பல்கலைக்கழகத்தில் மேற்கொள்ளப்பட்ட பாதுகாப்பு சோதனையில், அவ்வளாகம் பாதுகாப்பாக இருப்பது உறுதியாகியுள்ளது !
அவ்வளாகமும் சுமார் ஐந்து மணி நேரம் மூடப்பட்டிருந்த நிலையில், காவல்துறை சோதனை நடத்தினர் ; பின்னர் அவ்வளாகம் மீண்டும் வழக்கம் போல் இயங்கலாம் என அத்துறை கூறியது.
---------
சிலாங்கூர் Damansara-வில் உள்ள உணவகத்தில், பெண் ஒருவரை கழிவறையில், மறைமுகமாக படம் பிடித்ததாகக் கூறப்படும் சந்தேக நபரை, காவல்துறை வலைவீசி தேடி வருகிறது !
---------
நைஜீரியாவில், போதைப்பொருள் கடத்தியதாகக் கூறப்படும் மலேசிய பெண் ஒருவர் கைது செய்யப்பட்டதை அடுத்து, அவர் சிக்கியதற்கு அவரின் மகளே காரணம் என வெளிவந்துள்ள தகவல்களை, புக்கிட் அமான் தற்போது விசாரித்து வருகின்றது !