Skip to main content
மலாக்கா தேர்தல் ; சீக்கிரமாக வாக்களியுங்கள் !

 

மலாக்காவில் மழை பெய்ய ஆரம்பிப்பதற்கு முன்பே, வாக்களிக்கச் சென்று விடுங்கள் !

மாநில இடைக்கால முதலமைச்சர் அவ்வாறு கேட்டுக்கொண்டுள்ளார்.

பிற்பகலில் மழை பெய்யக்கூடும் என எச்சரிக்கை விடுக்கப்பட்டுள்ளதால், சீக்கிரமாகவே  வாக்களிப்பு மையத்துக்குச் சென்று, தங்களின் ஜனநாயக கடமையை நிறைவேற்றும்படி, அவர் மாநில மக்களை கேட்டுக்கொண்டார்.

இதனிடையே, கடைசியாக சரிபார்க்கப்பட்ட போது, அம்மாநிலத்தில் சுமார் 31 விழுக்காட்டினர் வாக்களித்துள்ளனர்.

அங்கு, 6 லட்சத்து 75-ஆயிரத்துக்கும் மேற்பட்டோர் வாக்களிக்கத் தகுதி பெற்றுள்ளனர்.

இவ்வேளையில், மலாக்கா தேர்தலை முன்னிட்டு, Astro Ulagam இணையத்தளத்தில், சிறப்புத் தளம் அறிமுகப்படுத்தப்படுகிறது.

அதில், போட்டியிடும் வேட்பாளர்கள், கட்சிகளின் நிலவரம், அதிகாரப்பூர்வ மற்றும் அதிகாரப்பூர்வமற்ற தேர்தல் முடிவுகள், வாக்காளர்களின் எண்ணிக்கை, வாக்குப்பதிவு விழுக்காடு மற்றும் வெற்றியாளர்களின் விவரங்களை அறிந்துகொள்ளலாம்.

மேல் விவரங்களுக்கு, astroulagam.com.my இணையத்தளத்தை நாடுங்கள்.

அதே வேளை, அத்தேர்தல் குறித்த அண்மையை தகவல்களை, இரவு 8 மணி தொடங்கி, ஒவ்வொரு மணி நேரமும், ராகாவில் கேட்டுத் தெரிந்துகொள்ளுங்கள்.

-----------

பெரும்பாலான தீபகற்ப மாநிலங்களில், நவம்பர் 15 முதல் 17-ஆம் தேதி வரை, இடியுடன் கூடிய கனமழை, மற்றும் பலத்த காற்று வீசும் என எதிர்பார்க்கப்படுகிறது !

காற்று ஒரே பகுதியில் குவியும் சூழல் நிலவலாம் என, அண்மைய வானிலை முன்னறிவிப்பு மாதிரிகளின் ஆய்வில் தெரியவந்துள்ளதே அதற்குக் காரணம் என, மலேசிய வானிலை ஆய்வு மையம் தெரிவித்துள்ளது. 

----------

இதனிடையே, சிலாங்கூரில் வெள்ளத்தால் 1,400-க்கும் மேற்பட்டோர் பாதிக்கப்பட்டுள்ளனர் !

பேராக்கில், ஏறக்குறைய 260 பேர், PPS மையங்களில், அடைக்கலம் நாடியுள்ளனர்.

---------

KL Kepong-கில், வெளிநாட்டவரால் வெட்டப்பட்டு, பலத்த காயத்திற்கு இலக்கான காவல்துறை அதிகாரியின் உடல்நலம் தேறி வருகிறது !

காயமடைந்த கையில் உள்ள சில விரல்களை, அவரால் தற்போது அசைக்க முடிவதாகத் தெரிவிக்கப்பட்டுள்ளது.

----------

பஹாங்கில், பிப்ரவரியில், குர்ஆன் புனித நூலை மிதித்து, அதனைப் புகைப்படம் எடுத்து சமூக ஊடகத்தில் பதிவேற்றிய ஆடவருக்கு, செஷன்ஸ் நீதிமன்றம், ஓராண்டு சிறைத்தண்டனையும், 2 லட்சத்து 50 ஆயிரம் ரிங்கிட் அபராதமும் விதித்து தீர்ப்பளித்துள்ளது !

RAAGA Aaha Siranta Isai!