
தேசிய கல்வி அமைப்பிற்கு வெளியே படித்து முடித்த மாணவர்கள், பொது பல்கலைக்கழகங்களில் சேர அனுமதிக்கும் முடிவை, அரசாங்கம் விரைவில் விரிவாக விளக்கவுள்ளது !
இந்த முடிவு அனைத்து தரப்பினராலும் நல்ல முறையில் ஏற்றுக்கொள்ளப்படும் என பிரதமர் நம்பிக்கை தெரிவித்துள்ளார் ; ஏனெனில் அந்த மாணவர்களுக்கு பொது பல்கலைக்கழகங்களில் உயர் கல்வி பெறும் வாய்ப்பை வழங்குகிறது என்றாரவர்.
ஆனால், SPM தேர்வில், மலாய் மொழி மற்றும் வரலாறு பாடங்களில் தேர்ச்சி பெற்றாக வேண்டும் எனும் நிபந்தனை, கட்டாயமாகவே தொடர்கிறது.
---------
நாட்டில் இளைஞர் மேம்பாட்டை முன்னெடுக்கும் முக்கிய அமைப்பான, மலேசிய இளைஞர் மன்றத்திற்கு, 5 மில்லியன் ரிங்கிட் நிதி ஒதுக்கப்படுவதாக, பிரதமர் அறிவித்துள்ளார் !
இந்த ஒதுக்கீடு, கடந்த ஆண்டை விட 1 மில்லியன் ரிங்கிட் கூடுதலாக வழங்கப்பட்டுள்ளது.
இளைஞர் செயல்திட்டங்களை முன்னெடுக்கும் அம்மன்றத்தின் பங்களிப்பை அரசாங்கம் அங்கீகரிக்கும் விதமாக, அந்நிதி ஒதுக்கப்படுவதாக, Datuk Seri Anwar Ibrahim கூறினார்.
----------
இவ்வாண்டு இறுதி வரைக்குமான அரிசி விநியோகம் கையிருப்பில் இருப்பதாக, அரசாங்கம் உத்தரவாதம் அளித்துள்ளது !
அத்தியாவசிய உணவுப் பொருட்களின் விநியோக நிலைத்தன்மையை நீண்ட காலத்திற்குப் பராமரிப்பதை உறுதிசெய்ய, அரசாங்கம் தொடர்ச்சியான நடவடிக்கைகளை எடுத்து வருவதாக, விவசாய, உணவு உத்தரவாத அமைச்சு தெரிவித்துள்ளது.
-----------
சிலாங்கூர் ஜாலான் அம்பாங்கில், குடி போதையில் மரண விபத்தை ஏற்படுத்தியதாகக் கூறப்படும், 24 வயது இளைஞன் மீது கொலை குற்றச்சாட்டு சுமத்தப்பட்டுள்ளது !
இம்மாத தொடக்கத்தில் நிகழ்ந்த அவ்விபத்தில், ஒரு தம்பதி உயிரிழந்தனர்.
----------
கெடா, பினாங்கு, கோலாலம்பூர் உட்பட, சில மாநிலங்களின் பெரும்பாலான பகுதிகளில், இரவு 9 மணி வரை, இடியுடன் கூடிய கனமழை பெய்யும் என மலேசிய வானிலை ஆய்வு மையம் கணித்துள்ளது !