
அடுத்தாண்டு, அனைத்து வகைப் பள்ளிகளுக்கும் ஒதுக்கப்படும் கூடுதல் பராமரிப்பு நிதி, உரிய பள்ளிகளைச் சென்று சேருவதை, அரசாங்கம் உறுதிச் செய்ய வேண்டும் !
அந்நிதி சரிவர சென்று சேர, தக்க முறை ஒன்று உருவாக்கப்பட வேண்டும் என மலாயா பல்கலைக்கழக இந்திய ஆய்வியல் துறை தலைவர், ரவிந்திரன் மாரையா கூறினார்.
தேசிய தினத்தையொட்டிய பிரதமர் உரையின்போது, அனைத்து வகைப் பள்ளிகளுக்கான பராமரிப்பு நிதி ஒதுக்கீடு, தற்போதுள்ள 1 பில்லியன் ரிங்கிட்டிலிருந்து, 1.5 பில்லியன் ரிங்கிட்டாக, அடுத்தாண்டு அதிகரிக்கப்படுவதாக, Datuk Seri Anwar Ibrahim அறிவித்திருந்தார்.
--------
பிரதமரின் பதவிக்காலத்தை 10 ஆண்டுகளுக்கு கட்டுப்படுத்துவது மற்றும் சட்டத்துறைத் தலைமை வழக்கறிஞர், பொது வழக்கறிஞர் ஆகியோரின் அதிகாரங்களைப் பிரிப்பது தொடர்பான சட்ட மசோதாக்கள், இரண்டாவது வாசிப்புக்கு தயாராக உள்ளன !
பிரதமர் Datuk Seri Anwar Ibrahim-மின் அனுமதி கிடைத்த பின்னர், அவைநாடாளுமன்றத்தில் தாக்கல் செய்யப்படலாம் என, சட்ட சீர்திருத்த அமைச்சர் தெரிவித்துள்ளார்.
அவ்விரண்டு மசோதாக்களும் நிறைவேற்றப்படுவதற்கு, நாடாளுமன்ற உறுப்பினர்களில், குறைந்தது மூன்றில் இரண்டு பங்கு ஆதரவு தேவைப்படும்.
----------
ஆயிரக்கணக்கானோரை பலிகொண்ட நேப்பாள வெள்ளப் பேரிரடால் பாதிக்கப்பட்டவர்களுக்குத் தேவையான, அத்தியாவசியப் பொருட்களை மலேசியா அனுப்பலாம் !
அவற்றுக்கு, அந்நாடு எந்தவொரு தடையும் விதிக்கவில்லை என, தற்காப்பு அமைச்சு தெரிவித்துள்ளது.
முன்னதாக, அப்பேரிடரில் சிக்கி பாதுகாப்பாக மீட்கப்பட்ட 77 மலேசியர்கள், தாயகத்துக்கு திருப்பி அனுப்பப்படுவர் என தெரிவிக்கப்பட்டிருந்தது.
----------
இதனிடையே, நேப்பாள வெள்ளத்தால் பாதிக்கப்பட்டுள்ள மலேசியர்களின் குடும்பங்களுக்கு, தேவைப்பட்டால் உளவியல் மற்றும் சமூக ஆதரவு வழங்க, மகளிர், குடும்பம், சமூக மேம்பாட்டு அமைச்சு தயாராக உள்ளது !
அத்துடன், பாதிக்கப்பட்ட குடும்பங்களுக்குத் தேவையான மற்ற உதவிகளையும் வழங்க, அவ்வமைச்சு தயாராக இருக்கின்றது.
உதவிகளை ஒருங்கிணைப்பதற்கு முன், வெளியுறவு அமைச்சிடமிருந்து மேலதிக தகவல்களுக்காக அமைச்சு காத்திருக்கின்றது.
---------
சரவாக் செரியானில், காற்றின் தரத்தைக் குறிக்கும் API குறியீடு, 300-க்கும் மேல் பதிவாகி, அபாய கட்டத்தில் உள்ளது !
Sri Aman, Kuching, Samarahan, Sarikei ஆகிய பகுதிகளில், அக்குறியீடு 200-க்கும் மேல் பதிவாகி, மிக ஆரோக்கியமற்ற நிலையில் உள்ளது.