Skip to main content
மலேசியாவின் எரிபொருள் விலை சிறந்ததாக உள்ளது !

 

தென்கிழக்கு ஆசியாவில் எரிபொருள் ஒதுக்கீட்டு நடவடிக்கைகளை இன்னும் அமல்படுத்தாத ஒரே நாடாக, மலேசியா உள்ளது என பிரதமர் தெரிவித்துள்ளார் !

அண்டை நாடுகளில் சில, எரிபொருள் பற்றாக்குறை காரணமாக 400 பெட்ரோல் நிலையங்களை மூட வேண்டிய நிலை ஏற்பட்டுள்ளதாக, டத்தோ ஸ்ரீ அன்வார் இப்ராஹிம் கூறினார்.

சில அண்டை நாடுகளில், RON95 பெட்ரோல் விலை, லிட்டருக்கு, 10 ரிங்கிட் வரை உயர்ந்துள்ளதைக் காட்டிலும், மலேசியாவின் ஒரு லிட்டர் விலை எவ்வளவோ குறைவு என அவர் கூறினார்.

தற்போதைய பொருளாதார மற்றும் புவியியல் அரசியல் சூழ்நிலைகளை, மக்கள் புரிந்து கொள்ள வேண்டும் எனக் கூறிய அவர், சமூக ஊடகங்களில் வரும் அது குறித்த போலி தகவல்களை நம்பி ஏமாற வேண்டாம், என்றார்.

---------

உயர்நீதிமன்ற முன்னாள் நீதிபதி டத்தோ ஸ்ரீ Abdul Halim Aman, மலேசிய ஊழல் ஒழிப்பு ஆணையத்தின் தலைமை ஆணையராக நியமிக்கப்பட்டுள்ளார் !

மாட்சிமை தங்கிய மாமன்னர் சுல்தான் இப்ராஹிம், அதனை அறிவித்துள்ளதாக அரசாங்க தலைமை செயலாளர் தெரிவித்துள்ளார்.  

அந்த புதிய MACC தலைமை ஆணையர், அடுத்த மாதம் 13-ஆம் தேதி முதல், தனது பணியை தொடங்குவார்.

----------

பினாங்கு Bukit Mertajam-மில், மோட்டார்சைக்கிள் ஒன்று சாலையில் இருந்த கல் தடுப்பை மோதி விபத்துக்குள்ளானதில், 2 வயது ஆண் குழந்தை, பரிதாபதாக உயிரிழந்தது !

அந்த மோட்டார்சைக்கிளை ஓட்டிய, அக்குழந்தையின் தாய் என நம்பப்படும் பெண்ணுக்கு, தலையில் காயம் ஏற்பட்ட நிலையில், அவரோடு பயணித்த மற்ற இரண்டு பிள்ளைகளும் உயிர் தப்பினர்.

----------

நாட்டில் 13 பகுதிகளில் முதற்கட்ட வெப்ப எச்சரிக்கை விடுக்கப்பட்டுள்ள நிலையில், அப்பகுதிகளில் தொடர்ந்து 3 நாட்களுக்கு வெப்பம், 35 முதல் 37 பாகை செல்சியஸ் வரை பதிவாகும் என Met Malaysia தெரிவித்துள்ளது !

கிளாந்தான் மாச்சாங், 2-ஆம் கட்ட வெப்ப அலையில் உள்ளது.

----------

மலாக்காவில், ஒரு காரோட்டுநரைப் பார்த்து, அநாகரிகமான கை சைகையைக் காட்டியதாகக் கூறப்படும், வாடகைப் பேருந்து ஓட்டுநர் தேடப்பட்டு வருகிறார் ! 

RAAGA Aaha Siranta Isai!