Skip to main content
மலேசியாவுக்கு, 15-ஆயிரம் தாதியர்கள் வரலாம் !

 

நாடு முழுவதும், 40-ஆயிரத்துக்கும் மேற்பட்ட பொது உயர்கல்விக்கூட மாணவர்களுக்கு, PTPTN கல்விக் கடன் முன்பணத் தொகை வழங்கப்படுகிறது !

அதற்கு, மொத்தம் 60.1 மில்லியன் ரிங்கிட் ஒதுக்கப்பட்டுள்ளது.

இவ்வாண்டு ஜூன் மாதத்தில் பொது பல்கலைக்கழகங்களில் சேரும் தகுதியுள்ள ஒவ்வொரு மாணவருக்கும், 1,500 ரிங்கிட் வழங்கப்படும்.

உயர்கல்வியைத் தொடங்க தேவையான செலவுகளுக்கு, அந்நிதி ஓரளவுக்கு உதவும் என PTPTN சொன்னது.

-----------

மோசடிகளைத் தடுக்க MyDigital ID-ஐ முழுமையாகப் பயன்படுத்துவதை,  Bukit Aman வரவேற்றுள்ளது !

இந்த அமைப்பில் உள்ள பல்வேறு பாதுகாப்பு அம்சங்கள் காரணமாக, மோசடிக்காரர்கள் ஏமாற்று நடவடிக்கைகளில் ஈடுபடுவது மேலும் கடினமாகும் என காவல்துறை கூறியது.

---------

சிலாங்கூர் Setia Alam-மில், வேலை முடிந்து வீட்டிற்கு நடந்து சென்று கொண்டிருந்த பெண்ணுக்கு, பாலியல் ரீதியாகத் தொல்லை கொடுத்ததாகக் கூறப்படும் நபரை, காவல்துறை தேடி வருகிறது !

----------

நாடு முழுவதும், 2021-றில் இருந்து இவ்வாண்டு வரை, பல்வேறு குற்றங்களுக்காக, கிட்டத்தட்ட 39-ஆயிரம் மோட்டார்சைக்கிள்கள் பறிமுதல் செய்யப்பட்டுள்ளதாக, சாலை போக்குவரத்துத் துறை தெரிவித்துள்ளது !

----------

மறைந்த இயக்குநர் பாரதிராஜாவுக்கு, அரச மரியாதை வழங்கப்படும் என, தமிழ்நாட்டு முதலமைச்சர் விஜய் அறிவித்துள்ளார் !

பாரதிராஜாவின் வீட்டுக்கு இன்று காலை நேரில் சென்ற விஜய், மலர்வளையம் வைத்து அஞ்சலி செலுத்தினார்.

தமிழ்த் திரையுலகில் முன்னணி இயக்குநராக வலம் வந்த பாரதிராஜா, சமீபகாலமாக உடல்நலக் குறைவால் பாதிக்கப்பட்டு, வீட்டில் இருந்தபடியே சிகிச்சை பெற்று வந்தார்.

இந்நிலையில், சிகிச்சைப் பலனின்றி இயக்குநர் இமயம் என்றழைக்கப்படும் அவர், இன்று அதிகாலை காலமானார்.

RAAGA Aaha Siranta Isai!