மனிதர்களைப் போலவே, விலங்குகள் குறிப்பாக வளர்ப்புப் பிராணிகளின் உடல்நலத்திற்கும் புகைமூட்டத்தால் குறிப்பிடத்தக்க பாதிப்பு உண்டாகிறது!
இருமல், சளி போன்ற உபாதைகள் பிராணிகளுக்கும் வரும் என்கிறார், மலேசிய கால்நடைச் சங்கத்தைச் சேர்ந்த Dr நேசவதி சுப்பிரமணியம்.
எவ்வாறு மனிதர்களிடையே அதிக ஆபத்துள்ள வர்கத்தினர் இருக்கின்றனரோ, பிராணிகளுக்கும் அது உண்டு எனக் கூறினார்.
நாள்பட்ட நோயுடைய பிராணிகள், தட்டையான முகம் கொண்ட பிராணிகள், வீட்டில் வளர்க்கப்படும் பறவைகளும் இதில் விதிவிலக்கல்ல என, Dr நேசவதி ராகா செய்தி பிரிவிடம் தெரிவித்தார்.
வீட்டில் செல்லப்பிராணிகளை வளர்ப்பவர்கள் இந்திந்த உபாதைகள் அவற்றிடம் இருக்கின்றனவா என்பதை கண்காணிக்குமாறு அவர் கூறுகிறார்.
இந்த புகைமூட்ட காலகட்டத்தில் தம்மிடம் மருத்துவ சேவையை நாடி வருவோரின் வளர்ப்புப் பிராணிகளிடையே இருமல், சளி போன்ற உபாதைகளும் காணப்படுகின்றன என்றார் அவர்.
தடுப்பு நடவடிக்கைகள், முன்னெச்சரிக்கைகள் உட்பட இதன் தொடர்பில் அவர் பகிர்ந்து கொண்ட மேலும் பல பயனுள்ள தகவல்கள் அடங்கிய முழு podcastடை, Raaga.my அகப்பக்கத்தில் கேட்கலாம்;
https://raaga.my/raaga-news-update