Skip to main content
மருந்துகள் கையிருப்பு போதுமாக உள்ளது!

அத்யாவசிய மருந்துகளின் கையிருப்பு நாட்டில் போதுமான அளவில் உள்ளது! 

Insulin மற்றும் தடுப்பூசிகளும் அதிலடங்கும் என சுகாதார அமைச்சு உத்தரவாதம் அளித்துள்ளது. 

நாடு முழுவதும் தொடர்ந்து மருந்துகள் போதுமான அளவில் இருப்பதை உறுதிச் செய்ய, கண்காணிப்புகள் தொடர்ந்து நடைபெறும் என்றும் KKM கூறியது. 

---  

STEM எனப்படும் அறிவியல், தொழில்நுட்ப, பொறியியல் மற்றும் கணித பாடங்களுக்கான அதிகமாகப் பதிவாகியுள்ளது! 

நாட்டிலுள்ள பல்கலைக்கழகங்களில் உள்ள கிட்டத்தட்ட 44 விழுக்காட்டு மாணவர்கள் STEM துறைகளில் பதிந்துக் கொண்டிருப்பதாக, கல்வி அமைச்சு தெரிவித்துள்ளது. 

இது ஆசிய pasificகில் பதிவாகியிருக்கும் மிக அதிக விழுக்காடுகளில் ஒன்றாகும். 

---  

பேராக், பஹாங், சிலாங்கூர், நெகிரி செம்பிலான், மலாக்கா மற்றும் ஜொகூரில் கனமழை எச்சரிக்கை!  

 

அம்மாநிலங்களின் சில பகுதிகளில் இன்று நன்பகல் ஒரு மணி வரை இடியுடன் கூடிய கனமழை பெய்யக்கூடும் என Metmalaysia கணித்துள்ளது. 

 

---- 

பஹாங், குவாந்தானில் இரும்புத் தொழிற்சாலை ஒன்றில் ஏற்பட்ட வெடிப்புச் சம்பவத்தில் நல்வர் காயமடைந்தனர். 

 

----  

Chicagoவில் மலேசிய மருத்துவர் ஒருவர், தீவிரமான கணைய புற்றுநோயை எதிர்த்துப் போராடும் புதிய மருந்து ஒன்றைக் கண்டுபிடித்து சாதனை படைத்துள்ளார்! 

ஓராண்டுக்கும் குறைவான காலம் எஞ்சியிருக்கும் அவ்வகை புற்றுநோய் உடைய நோயாளிகளின் உயிர் பிழைப்பு விகிதத்தை அம்மருந்து இரண்டு மடங்காக்குகிறது. 

அந்த சிகிச்சையால் உயிரிழப்பு அபாயம் 38 விழுக்காடு குறைவதாகவும் தெரிவிக்கப்பட்டுள்ளது. 

RAAGA Aaha Siranta Isai!