Skip to main content
மருத்துவ கட்டணம் நிலைநிறுத்தப்பட வேண்டும்!

 

 

 

குறைந்த வருமானம் பெறுவோரின் சுமையைக் குறைக்க, பொது மருத்துவமனைகள் மற்றும் கிளினிக்குகளின் நடப்பு அடிப்படை கட்டண விகிதம் நிலைநிறுத்தப்பட வேண்டும்!

 

நாட்டின் சம்பள விகித உயர்வு இன்னும் பொருளாதார வளர்ச்சி மற்றும் தற்போதைய வாழ்க்கைச் செலவுக்கு ஈடாகாத நிலையில், அரசாங்கம் கட்டணங்களை உயர்த்துவதற்கு எந்த அடிப்படையும் இல்லை என்று அவர் வலியுறுத்தினார்.

 

தேர்தல், பள்ளி மாணவர்களின் மனநலன், ஊழல் ஒழிப்பு நடவடிக்கைகள் உள்ளிட்ட மேலும் பல விஷியங்கள் தொடர்பில் நேற்று பிரதமர் தொலைக்காட்சி நேர்க்காணல் ஒன்றில் பேசிய போது அதனை தெரிவித்தார்.

 

------ 

 

Shah Alamமில் வெள்ள அபாத்தைக் குறைக்க, ஏழரை லட்சம் ரிங்கிட் மதிப்பிலான மூன்று உடனடி வெள்ள தனிப்பு நடவடிக்கைகளை சிலாங்கூர் வடிகால் நீர்பாசனத் துறையுடன் இணைந்து மேற்கொள்கிறது அரசாங்கம்.

 

அத்திட்டங்கள் கட்டங்கட்டமாக அடுத்தாண்டு February மற்றும் மார்ச்சில் தயாராகும் என எதிர்ப்பார்க்கப்படுகிறது.

 

------ 

 

வரும் ஞாயிறு காலை நடத்தப்படவுள்ள MySiren முறை அல்லது தேசிய முன்னெச்சரிக்கை அமைப்பிற்கான பொது சோதனை குறித்து மலேசிய தொடர்பு பல்லூடக ஆணையம் பொதுமக்களுக்கு நினைவூட்டியிருக்கிறது!

 

பொதுமக்கள் தங்களின் கைப்பேசிகளில் அவசரக்கால எச்சரிக்கைகள் அம்சத்தை முடுக்கிவிடும்படியும்,  கைப்பேசி மென்பொருளை அதன் மிக அண்மைய பதிப்பிற்குப் புதுப்பித்துக்கொள்ளும்படியும் கேட்டுக்கொள்ளப்படுகிறார்கள்.

 

-----

 

இதனிடையே இந்திய நாட்டவசர்களுக்கான விசா விலக்கு அடுத்தா ஜனவரி ஒன்றாம் தேதி முடிவுக்கு வருவதை குடிநுழைவுத் துறை உறுதிப்படுத்தியிருக்கிறது!

 

அதற்குப் பின் மலேசியாவுக்கு வர இந்திய நாட்டவர்கள் முறையான விசாவுக்கு விண்ணப்பிக்க வேண்டும் என அத்துறை அறிக்கை ஒன்றில் குறிப்பிட்டுள்ளது.

 

வருகின்ற டிசம்பர் ஒன்று தொடங்கி MyVisa அகப்பக்கத்தில் விண்ணப்பங்களை சமர்ப்பிக்கலாம்.

 

------

 

இன்று தொடங்கி அடுத்த ஒரு வாரத்திற்கு தீபகட்பத்தில் ரோன்97, உதவித் தொகை வழங்கப்படாத ரோன்95 மற்றும் டீசல் விலை முறையே 25 சென் குறைகிறது!

 

------ 

 

Astro Ulagam ஏற்பாட்டில் நடத்தப்பட்ட இளம் செய்தி வாசிப்பாளர் தேடலின் இரண்டாம் கட்டத்திற்கு 25 பங்கேற்பாளர்கள் தேர்வாகியுள்ளனர்!

 

இம்மாதம் 30ஆம் தேதி வரை தங்களுக்கு விருப்பமான பங்கேற்பாளருக்குப் பொதுமக்கள் வாக்களிக்கலாம்.

 

வாக்களிப்போர் ஒவ்வொருவருக்கும் நாளுக்கு ஐம்பது வாக்குகள் வரை செலுத்த அனுமதி உண்டு.

 

வாக்களிப்புத் தளம் உள்ளிட்ட மேல் விவரங்களுக்கு Astro உலகம் அகப்பக்கத்தை வலம் வாருங்கள்.

 

RAAGA Aaha Siranta Isai!