
மதியிறுக்கம் கொண்ட மாணவர்களுக்காக, அடுத்தாண்டு முதல் தனி வகுப்புகளை அறிமுகப்படுத்த கல்வி அமைச்சு திட்டமிட்டுள்ளது !
சிறப்பு கற்றல் கற்பித்தல் முறை தேவைப்படும் மாணவர்களின் சேர்க்கை ஆண்டுதோறும் அதிகரித்து வருவதைத் தொடர்ந்து, கூடுதல் வகுப்பறைகளை அமைப்பது உள்ளிட்ட திட்டங்களை அமைச்சு உருவாக்கி வருகின்றது.
அந்தத் திட்டத்துக்கான சிறப்புக் கல்வி கட்டமைப்பை, கடந்தாண்டிலிருந்தே அமைச்சு உருவாக்கி வருவதாகவும் தெரிவிக்கப்பட்டது.
----------
வடகிழக்குப் பருவமழையால் ஏற்படக்கூடிய வெள்ளத்தை எதிர்கொள்ள, ஜோகூரில் 1,000 பொது தற்காப்புப் படையினர் மற்றும் தன்னார்வலர்கள் பணியில் ஈடுபடுத்தப்படவுள்ளனர் !
அவசரகால மீட்புப் பணிகளை விரைவுபடுத்தவும், பொதுமக்களிடையே விழிப்புணர்வை ஏற்படுத்தவும், தொடர்ந்து ஒத்திகைகள் நடத்தப்பட்டு வருவதாகவும், அப்படை கூறியது.
அப்பருவமழை, அடுத்தாண்டு மார்ச் மாதம் வரை நீடிக்கும் என எதிர்பார்க்கப்படுகிறது.
----------
சிலாங்கூரில் 1,100-க்கும் மேற்பட்டோர் வெள்ளத்தால் பாதிக்கப்பட்டுள்ளனர் !
திரங்கானுவில் 135 பேரும், பேராக்கில் கிட்டத்தட்ட 300 பேரும், சபாவில் 122 பேரும் PPS மையங்களில் தங்கியுள்ளனர்.
---------
Astro Ulagam ஏற்பாட்டில் நடத்தப்பட்ட இளம் செய்தி வாசிப்பாளர் தேடலின் இரண்டாம் கட்டத்திற்கு 25 பங்கேற்பாளர்கள் தேர்வாகியுள்ளனர் !
இப்போலிருந்து இம்மாதம் 30ஆம் தேதி வரை தங்களுக்கு விருப்பமான பங்கேற்பாளருக்குப் பொதுமக்கள் வாக்களிக்கலாம்.
வாக்களிப்போர் ஒவ்வொருவருக்கும் நாளுக்கு ஐம்பது வாக்குகள் வரை செலுத்த அனுமதி உண்டு.
வாக்களிப்புத் தளம் உள்ளிட்ட மேல் விவரங்களுக்கு Astro உலகம் அகப்பக்கத்தை வலம் வாருங்கள்.
---------
சபரிமலைக்கு வரும் பக்தர்களின் எண்ணிக்கை குறைந்ததற்கு, முன்பதிவு முறையில் ஏற்பட்ட குளறுபடிகளே காரணம் என, கேரள தேவஸ்வம் அமைச்சர் தெரிவித்துள்ளார் !
முன்பதிவு செய்யப்பட்ட தரிசன நேரங்கள் சட்டவிரோதமாக மொத்தமாக விற்கப்படுவதாகச் சந்தேகம் எழுந்துள்ள நிலையில், நேரடி முன்பதிவு வாய்ப்புகளை அதிகரிக்க, கேரள உயர் நீதிமன்றத்தின் ஒப்புதலைப் பெற நடவடிக்கை எடுக்கப்பட்டுள்ளதாகவும் அவர் கூறினார்.
இதனிடையே, சபரிமலைக்கு வரும் பக்தர்கள், பம்பை ஆற்றில் நீராடிவிட்டு ஆடைகளை அங்கேயே வீசி சென்றால், ஐந்தாயிரம் ரூபாய் அபராதம் விதிக்கப்படும் என தெரிவிக்கப்பட்டுள்ளது.