Skip to main content
மது போதையில் வாகனமோட்டுபவர்களுக்கு அறிவிப்பு !

 

2027 வரவு செலவு தாக்கல் !

731ஆவது திருக்குறளை ஒப்புவித்து, 2027 வரவு செலவு திட்டத்தை, இன்று நாடாளுமன்றத்தில் அறிவித்து முடித்தார் பிரதமர் டத்தோ ஸ்ரீ அன்வார் இப்ராஹிம்.....

"தள்ளா விளையுளும் தக்காரும் தாழ்விலாச்
செல்வரும் சேர்வது நாடு"

இது தான் அந்த குறளாகும்.

குறையாத விளைச்சலும், தகுதியான சான்றோர்களும், குறைவில்லாத செல்வந்தர்களும் ஒருசேரக் கூடி வாழும் இடமே சிறந்த நாடாகும், என்பதே அக்குறளின் பொருளாகும்.

இம்முறை பட்ஜட், வானத்தை எட்டிப்பிடித்தல், மண்ணோடு வேரூன்றி இருத்தல்' என்ற கருப்பொருளைக் கொண்டுள்ளது.

அதன் கீழ் அறிவிக்கப்பட்ட சில திட்டங்களின் சாராம்சங்களை, இப்போது காண்போம்...

இந்தியர்களுக்கான TEKUN மற்றும் AIM நிதியுதவிக்கான ஒதுக்கீடு, 150 மில்லியன் ரிங்கிட்டாக உயர்கிறது.

மேலும் இந்திய இளைஞர்களுக்கான திறன் மேம்பாட்டில், இம்முறை அரசாங்கம் கூடுதல் கவனம் செலுத்துகிறது.

அதை ஊக்குவிக்கும் விதமாக மலேசிய இந்திய உருமாற்றுப் பிரிவு மித்ராவுக்கான அடுத்தாண்டு ஒதுக்கீடு, 150 மில்லியன் ரிங்கிட்டாக உயர்கிறது.

இந்திய இளைஞர்களுக்கு, automation,  தொழில்நுட்பம், விமானப் பராமரிப்பு போன்ற துறைகளில், திறன் மேம்பாட்டு வசதிகளையும், வேலை வாய்ப்புகளையும் ஏற்படுத்தித் தர அது உதவும்.

மேலும் தொழிலாளர்களுக்கான மரியாதைக்குரிய மாதாந்திர அடிப்படை சம்பளம் , ஆயிரத்து எழுநூரு ரிங்கிட்டிலிருந்து ஈராயிரம் ரிங்கிட்டாக உயர்த்தப்படுகிறது.

மாற்றுத்திறனாளிகள் நிதியுதவுக்காக , ஒன்று புள்ளி ஐந்து பில்லியன் ரிங்கிட் வழங்கப்படுகிறது.

பள்ளி தொடங்குவதற்கு முன்பு வழங்கப்படும் உதவித் தொகை, 150 ரிங்கிட்டிலிருந்து இருநூரு ரிங்கிட்டாக உயர்கிறது.

முதியோருக்கான உதவித் திட்டங்களுக்காக, ஒன்று புள்ளி மூன்று பில்லியன் ரிங்கிட் ஒதுக்கப்படுகிறது.

ஈராயிரத்து ஐநூரு ரிங்கிட்டுக்கும் கீழ் மாதாந்திர சம்பளம் வாங்குவோர், தங்களின் PTPTN கடனைத் திருப்பிச் செலுத்துவதை ஒத்தி வைக்கலாம்.

எந்த நிலுவையும் இல்லாமல் சீராகக் கட்டணம் செலுத்தி வருவோருக்கு பத்து விழுக்காட்டு கழிவு உண்டு.

இதனிடையே மது போதை மற்றும் போதை பொருளை எடுத்துக் கொண்டு, உயிரிழப்புகளை ஏற்படுத்தும் வாகனமோட்டிகள், இனி பாதிக்கப்பட்ட குடும்பத்திற்கு நஷ்ட ஈடு செலுத்த வேண்டும்.

அதற்கு இடமளிக்கும் விதமாக, சாலை போக்குவரத்துச் சட்டத்தில் திருத்தம் செய்யப்பட்டுள்ளது.

RAAGA Aaha Siranta Isai!