
Negeri Sembilan தேர்தலுக்கான முன்கூட்டிய வாக்களிப்பு நேற்று நடைபெற்றிருந்தாலும், வாக்கு எண்ணும் பணிகள் வரும் சனிக்கிழமை மாலை 5 மணிக்குத்தான் தொடங்கும் !
குறிப்பிட்ட கட்சி ஒன்று, முன்னிலையில் இருப்பதாக சமூக ஊடகங்களில் பரவி வரும் தகவல் போலியானது என தேர்தல் ஆணையம் தெரிவித்துள்ளது.
வரும் சனிக்கிழமை அங்கு தேர்தல் நடைபெறுகிறது.
மொத்தம் 36 தொகுதிகளில், 103 வேட்பாளர்கள், போட்டியில் குதித்துள்ளனர்.
அந்நாளன்று, 72 முதல் 75 விழுக்காட்டு வாக்காளர்கள் வாக்களிப்பர் என எதிர்பார்க்கப்படுவதாக தெரிவிக்கப்பட்டுள்ளது.
---------
இவ்வேளையில், Negeri Sembilan தேர்தலில் வாக்களிக்க செல்வோருக்காக, KTMB நிறுவனம், KTM மற்றும் ETS ரயில் சேவைகளை மூன்று நாட்களுக்கு அதிகரித்துள்ளது !
வெள்ளிக்கிழமை முதல் ஞாயிற்றுக்கிழமை வரை இந்த கூடுதல் ரயில் சேவைகள் இயக்கப்படும்.
36 KTM ரயில் சேவைகளும், 30 ETS சேவைகளும் கூடுதலாக இயக்கப்படவுள்ளன.
---------
கெடா லுனாசில், 4 தொழிற்சாலைகளில் ஏற்பட்ட தீ, இன்னும் அணைக்கப்பட்டு வருகின்றது !
பலத்த காற்று வீசியதால், அட்டைப் பெட்டிகள், மெழுகுவர்த்தி போன்ற, எளிதில் தீப்பற்றக்கூடிய பொருட்கள் அதிகளவில் இருந்ததால், தீயை அணைக்கும் பணிகள் சவாலாக இருந்ததாக, தீயணைப்புத் துறை தெரிவித்துள்ளது.
எனினும், நேற்று காலை ஏற்பட்ட அச்சம்பவத்தில், யாரும் பாதிக்கப்படவில்லை.
----------
மின் சிகரெட் பயன்பாட்டுடன் தொடர்புடைய நோய்களால் ஏற்படும் சுகாதார மற்றும் பொருளாதார சுமை, ஆண்டுக்கு சுமார் 369 மில்லியன் ரிங்கிட்டை எட்டுவதாக, சுகாதார அமைச்சு தெரிவித்துள்ளது !
இது, vape பொருட்களிலிருந்து கிடைக்கும் கலால் வரி வருவாயை விட அதிகம் என அமைச்சு கூறியது.
---------
ஜொகூர், Negeri Sembilan சிலாங்கூர் உட்பட சில மாநிலங்களின் பெரும்பாலான பகுதிகளில், இன்றிரவு 7 மணி வரை, இடியுடன் கூடிய கனமழை பெய்யலாம் என, மலேசிய வானிலை ஆய்வு மையம் தெரிவித்துள்ளது !