முன்னாள் பிரதமர் Tan Sri Muhyiddin Yassin மீது இருந்த 4 குற்றச்சாட்டுகளில் இருந்து நீதிமன்றம் அவரை விடுதலை செய்துள்ளது!
அத்தீர்ப்பினால், 200 மில்லியன் ரிங்கிட் கையூட்டு பெற்றதாக நம்பப்படும் ஒரு குற்றச்சாட்டும், 3 பணமோசடி குற்றச்சாட்டுகளும் ரத்து செய்யப்பட்டுள்ளன.
அதே சமயம் Bersatu கட்சிக்காக, 25 மில்லியன் ரிங்கிட்டுக்கும் அதிகமான தொகையை லஞ்சமாகப் பெற்று தனது பதவியை முறைகேடாகப் பயன்படுத்தியதாக அவர் மீது சுமத்தப்பட்டுள்ள இன்னப்பிற மூன்று குற்றச்சாட்டுகள் இன்னும் நிலுவையில் உள்ளன.
--
நாளை மறுநாள், புதிய MyKad அட்டைக்கான விண்ணப்பங்கள் தொடங்கும் நிலையில், அதற்காக மக்கள் தேசிய பதிவுத் துறை அலுவலகங்களுக்கு அவசரமாகச் செல்ல வேண்டாம் !
சுமார் 50 கூடுதல் பாதுகாப்பு அம்சங்களைக் கொண்ட அப்புதிய Mykad அறிமுகம், கட்டம் கட்டமாக மேற்கொள்ளப்படும் என உள்துறை அமைச்சு தெரிவித்துள்ளது.
--
மலேசியா தினத்தை முன்னிட்டு, சிறப்பு H தொடர் வாகனப் பதிவு எண்களுக்கான ஏலம் நாளை தொடங்குகிறது.
1 முதல் 9,999 வரையிலான எண்களைக் கொண்ட அந்த ஏலம் செப்டம்பர் 20-ஆம் தேதி வரை நடைபெறும் என சாலைப் போக்குவரத்துத் துறை தெரிவித்துள்ளது.
--
சிலாங்கூர், Batang Kali-யில் படிவம் ஆறு மாணவர்களை மலை ஏற அழைத்து சென்ற அறுபது வயது ஆடவர் மயங்கி விழுந்து உயிரிழந்துள்ளார்.
--
கெடா கூலிமில் நேற்று இரவு கணவனால் 13 முறை கத்தியால் குத்தப்பட்டதாக நம்பப்படும் சம்பவத்தில், அவரின் 39 வயது மனைவி உயிரிழந்தார்.
--
ஆகக் கடைசி தகவல் படி, நாட்டின் 40 இடங்களில் காற்றின் தரம் ஆரோக்கியமற்ற அளவில் இருக்கிறது!
அவை Sarawak, Selangor, KL, Putrajaya, Johor, Negeri Sembilan, Pahang, Terengganu, Perak, Penang, Melaka ஆகிய மாநிலங்களின் சில பகுதிகளை உள்ளடக்கியவை.