Skip to main content
Mykad அட்டைக்கு அவசரம் காட்டாதீர்!

 

 

 

புதிய Mykad அடையாள அட்டையை மாற்றிக் கொள்ள பொதுமக்கள் அவசரம் காட்ட வேண்டாம்!

 

அப்படியே மாற்ற வரவேண்டுமாயின், முதலில் இணையம் வாயிலாக முன்பதிவு செய்துக் கொண்டு பின்னர் முகப்புக்கு வருமாறு, தேசிய பதிவுத் துறையின் அடையாள அட்டை பிரிவு இயக்குனர் தெரிவித்தார்.

 

சில சமயங்களில் வாடிக்கையாளர்கள் சில மணி நேரங்களுக்கு முகப்பில் காத்துக் கொண்டிருப்பதை அவர் சுட்டிக் காட்டினார்.

 

முகப்புகளிலும் JPN கிளைகளிலும் நெரிசலைக் குறைக்கவும், சேவை தரத்தை மேம்படுத்தவும், இந்த இணைய முன்பதிவு முறை இலகுவான வழி என்றார் அவர்.

 

அவருடனான முழு நேர்க்காணலை, Astro Audio Instagram, TikTok மற்றும் Youtubeபில் காணலாம்.

 

----- 

 

வெளிநாட்டுத் தொழிலாளர்களுக்காக மற்ற நாடுகளை நம்பியிருப்பதைக் கட்டங்கட்டமாக குறைக்க முயற்சிக்கிறது அரசாங்கம்!

 

அது 13ஆவது மலேசிய திட்டத்திற்கு ஏற்ப அமைகிறது.

 

உள்நாட்டுத் தொழில்துறை தேவையை அறிந்து, நாட்டு மக்களுக்கான வேலை வாய்ப்புகளுக்கு எந்த இடையூறும் இல்லாமல் இருப்பது உறுதிச் செய்யப்படும் என, துணை பிரதமர் தெரிவித்தார்.

 

------

 

அடுத்த மாதம் நடைபெறவிருக்கும் 16வது மலாக்கா மாநிலத் தேர்தலை எதிர்கொள்வதற்காக, பாரிசான் நேஷனல் மற்றும் பெரிகாத்தான் நேஷனல் ஒரு அரசியல் புரிந்துணர்வு ஒப்பந்தத்தில் கையெழுத்திட்டுள்ளதாகத் தகவல்கள் வெளியாகியுள்ளன.

 

தேர்தலுக்கான வேட்புமனுத் தாக்கல் செயல்முறைக்குப் பிறகு, வரும் சனிக்கிழமை  ஒரு கூட்டுத் தேர்தல் அறிக்கையை வெளியிடவும் BN மற்றும் PN ஒப்புக்கொண்டுள்ளதாகத் தகவல்கள் தெரிவிக்கின்றன.

 

----- 

 

இணைய மோசடிக்காரர்களால் வெகு சிறப்பாகப் பயன்படுத்தப்பட்டு வரும் செயற்கை நுண்ணறிவு தொழில்நுட்பம், மோசடிகளை அடையாளம் காணும் செயல்முறையை கடுமையாக்கின்றது!

 

இணைய மோசடி இனி தொழில்நுட்பம் சார்ந்து பிரச்னை மட்டும் இல்லை என, தொடர்புத்துறை அமைச்சு எச்சரித்துள்ளது.

 

நடப்பில் அன்றாட வேலைக்கு வலுவாக இலக்கவியல் சேவைகளை நம்பியிருக்கும் வியாபாரங்கள், நிதி நிறுவனங்கள், அரசு அமைப்புக்கள் என பல்வேறு துறைகள் இதில் பாதிக்கப்படுவதை அவ்வமைச்சு ஒப்புக் கொண்டுள்ளது.

 

இந்நிலையை எதிர்கொள்ள, மலேசிய தொடர்பு பல்லூடக ஆணையத்துடன் இணைந்து பல்வேறு ஆக்ககர நடவடிக்கைகள் எடுக்கப்பட்டு வருவதாகவும் அவ்வமைச்சு கூறியது.

 

--- 

 

இவ்வாண்டின் முதல் ஆறு மாதங்களில் மட்டும் சிறாரை உட்படுத்திய, உடல், பாலியல் மற்றும் உணர்வு துன்புறுத்தல் சம்பவங்கள் மூவாயிரத்து ஐநூரு சமூக நலத் துறையில் பதிவாகியிருக்கின்றன. 

 

அதே காலகட்டத்தில் கவனக்குறைவு மற்றும் கைவிடப்பட்ட சம்பவங்களின் எண்ணிக்கையும் அதிகரித்திருப்பதாக, மகளிர் குடும்ப சமூக மேம்பாட்டு அமைச்சு தெரிவித்தது.

 

RAAGA Aaha Siranta Isai!