Skip to main content
MySiren தரவை எடுக்காது!

 

MySiren எனப்படும் தேசிய முன்னெச்சரிக்கை அமைப்பு முழுமையாக செயல்பாட்டுக்கு வந்ததும், பயனர்கள் தங்களின் கைப்பேசியில் செயலி எதனையும் பதிவிறக்கம் செய்யாமலேயே அவசர கால எச்சரிக்கையைப் பெறுவர்! 

 

பேரிடர்கள் குறித்து பொதுமக்களுக்கு விரைந்து தகவல் அனுப்பி, அதன் மூலம் அவர்கள் தங்களையும் தங்களின் உடமைகளையும் பாதுகாத்துக் கொள்ள முடியும் என, மலேசிய தொடர்பு பல்லூடக ஆணையம் நம்புகிறது. 

 

இதனிடையே MySiren அமைப்பால் பயனர்களின் கைப்பேசியில் உள்ள சுய தரவுகளைப் பெற முடியாது! 

 

அது எச்சரிக்கை அறிவிப்புகளை மட்டுமே வெளியிடும் என கூறியுள்ளார்  DS Fahmi Fadzil. 

 

------  

 

ஆகக் கடைசி தகவல்படி சிலாங்கூரில் ஆயிரத்து முன்னூருக்கும் மேற்பட்டோர் வெள்ளத்தால் பாதிக்கப்பட்டுள்ளனர். 

 

பேராவில் முன்னூருக்கும் மேற்பட்டோரும், திரங்காணுவில் நூற்றுக்கும் மேற்பட்டோரும் தற்காலிக துயர் துடைப்பு மையங்களில் தங்க வைக்கப்பட்டுள்ளனர். 

 

------ 

 

Kuala Lumpur அனைத்துலக விமான நிலையத்தின் சிறப்புப் பிரமுகர்களுக்கான அறையில், அமைச்சர் ஒருவர் வழுக்கி விழுந்த சம்பவத்தை அடுத்து, அங்கு உடனடி திருத்த நடவடிக்கைகள் மேற்கொள்ளப்படவிருக்கின்றன. 

 

சம்பந்தப்பட்ட பகுதியில் முழுமையான சோதனை நடத்தப்பட்டு, பாதுகாப்பை உறுதிச் செய்யும் வேலைகளும் மேற்கொள்ளப்பட்டுள்ளதாக, Malaysia Airports Holdings நிறுவனம் தெரிவித்துள்ளது. 

-----

 

இணைய விளையாட்டுச் சேவைகளை வழங்கும் நிறுவனங்களுக்கு சிறப்பு உரிமத்தை விதிக்கும் எண்ணம் அரசாங்கத்துக்கு இல்லை! 

 

இணையவழி விளையாட்டுச் சேவைகள் தொடர்பான அபாயங்களின் வளர்ச்சி மற்றும் பொருத்தமான ஒழுங்குமுறை அணுகுமுறைகளை மதிப்பிடுவதற்காக ஒரு ஆய்வை மலேசிய தகவல் தொடர்பு மற்றும் பல்லூடக உள்ளடக்க மன்றம் மேற்கொண்டு வருவதாக, தொடர்புத்துறை துணை அமைச்சர் தெரிவித்தார். 

 
------

 

சிலாங்கூர் Paya Jaras Hilirரில் குரங்கு தாக்கி ஆறு மாத ஆண் குழந்தையின் முகத்தில் மோசமான காயங்கள் உண்டானது! 

 

இதுவரை அப்பகுதியில் பத்துக்கும் மேற்பட்டோரை உட்படுத்திய குரங்கு தாக்குதல் சம்பவங்கள் பதிவானதாக அவ்வூர் மக்கள் தெரிவித்துள்ளனர். 

 

-----

 

Astro Ulagam ஏற்பாட்டில் நடத்தப்பட்ட இளம் செய்தி வாசிப்பாளர் தேடலின் இரண்டாம் கட்டத்திற்கு 25 பங்கேற்பாளர்கள் தேர்வாகியுள்ளனர்! 

 

இப்போலிருந்து இம்மாதம் 30ஆம் தேதி வரை தங்களுக்கு விருப்பமான பங்கேற்பாளருக்குப் பொதுமக்கள் வாக்களிக்கலாம். 

 

வாக்களிப்போர் ஒவ்வொருவருக்கும் நாளுக்கு ஐம்பது வாக்குகள் வரை செலுத்த அனுமதி உண்டு. 

 

வாக்களிப்புத் தளம் உள்ளிட்ட மேல் விவரங்களுக்கு Astro உலகம் அகப்பக்கத்தை வலம் வாருங்கள். 

 

 

RAAGA Aaha Siranta Isai!