
Negeri Sembilan தேர்தலில், Rantau தொகுதியைத் தக்கவைத்துக் கொள்ள, தேசிய முன்னணியின் துணைத் தலைவர் Datuk Seri Mohamad Hassan, பக்காத்தான் ஹராப்பான் வேட்பாளர் Dr Azizul Hakim Mahdi-யை நேரடிப் போட்டியில் எதிர்கொள்ளவுள்ளார் !
இன்று காலை வேட்புமனு தாக்கல் நிறைவடைந்ததைத் தொடர்ந்து, இது உறுதியானது.
இதனிடையே, சென்னா தொகுதியில் DAP-இன் அந்தோணி லோக், BN வேட்பாளர் John Siow Kong Choon-னுடன் நேரடிப் போட்டியில் களமிறங்குகிறார்.
மற்ற சில தொகுதிகளைப் பொறுத்தவரை, Paroi மற்றும் Kota தொகுதிகளில் PH, BN மற்றும் பெர்சத்து இடையே மும்முனைப் போட்டி நிலவுகிறது.
அதே வேளை, Chembong தொகுதியில், BN மற்றும் PH வேட்பாளர்களுக்கு இடையே நேரடிப் போட்டி நிலவுகிறது.
ஆகஸ்டு 1-ஆ தேதி, அம்மாநிலத்தில் 36 தொகுதிகளில் தேர்தல் நடைபெறுகிறது.
-----------
மலேசியத் தமிழ் மொழி, நாட்டின் கலாச்சாரச் செழுமையை வலுப்படுத்தும் முக்கிய மொழிகளில் ஒன்றாகும் என, கல்வித் துணை அமைச்சர் Wong Kah Woh தெரிவித்துள்ளார் !
பேராக் தைப்பிங்கில் நடைபெற்ற 10-ஆவது தேசிய செந்தமிழ் விழாவை நிறைவு செய்து உரையாற்றிய அவர், தமிழ் இலக்கியத்தை, அடுத்த தலைமுறையினரிடம் கொண்டு சேர்க்கும் ஆசிரியர்கள் மற்றும் பெற்றோர்களின் பங்களிப்பைப் பாராட்டினார்.
தமிழ்ப்பள்ளிகளின் கல்வி நடவடிக்கைகளுக்குத் தேவையான உதவிகளை, அரசாங்கம் தொடர்ந்து வழங்கும் எனக் கூறிய அவர், இது போன்ற போட்டி நிகழ்வுகளை நடத்தி மாணவர்களின் திறனை வெளிக்கொண்ர்வது முக்கியமான ஒன்றாகும், என்றார்.
----------
மலேசியாவின் மொத்த உள்நாட்டு உற்பத்தி, இவ்வாண்டின் இரண்டாம் காலாண்டில், 5.8 விழுக்காடாக உயர்ந்துள்ளது !
இது, முதல் காலாண்டில் பதிவான 5.4 விழுக்காட்டு வளர்ச்சியை விட, சிறந்த முன்னேற்றமாகும்.
விவசாயத் துறையைத் தவிர, பெரும்பாலான பொருளாதாரத் துறைகளின் வளர்ச்சியே, இதற்கு முக்கியக் காரணமாகும் என, பிரதமர் தெரிவித்துள்ளார்.
---------
பேராக் கம்பாரில் உள்ள இடைநிலைப்பள்ளியியொன்றின் வகுப்பறைக்குள், பிளாஸ்டிக் நாற்காலி ஒன்று தீ வைத்து எரிக்கப்பட்ட நிலையில் கண்டுபிடிக்கப்பட்டதைத் தொடர்ந்து, அது சேதப்படுத்தும் செயல் என சந்தேகத்தின் பேரில் காவல்துறை விசாரணை நடத்தி வருகிறது !
----------
கோலாலம்பூர் Setapak-கில் உள்ள பேருந்து நிறுத்துமிடத்தில், பல்கலைக்கழக மாணவர் ஒருவரை, உலோகக் கம்பியால் தாக்கியதாகச் சந்தேகிக்கப்படும் வெளிநாட்டவர் ஒருவர், கைது செய்யப்பட்டுள்ளார் !