Skip to main content
N9 தேர்தலுக்கு, Johor காவல்துறை உதவும் !

 

ஆகஸ்டு 1-ஆம் தேதி Negeri Sembilan தேர்தலின் போது, ஜொகூரின் 318 காவல்துறை அதிகாரிகள் பணியில் ஈடுபட்டிருப்பர் !

அங்கு தேர்தல் சுமூகமாக நடைபெறுவதை உறுதிச் செய்ய, Negeri Sembilan காவல்துறைக்கு உதவியாக அவர்கள் களமிறங்குகின்றனர்.

அந்நாளன்று, பல சாலைகள் மூடப்பட்டு, போக்குவரத்துக்குத் திருப்பிவிடப்படும்.

அம்மாநிலத்தில், 8 லட்சத்து 67-ஆயிரத்துக்கும் மேற்பட்டோர் வாக்களிக்கத் தகுதிப் பெற்றுள்ளனர்.

அதில் 14.9 விழுக்காட்டினர் இந்தியர்களாவர்.

36 தொகுதிகளில் நடைபெறும் தேர்தலில், 103 வேட்பாளர்கள் போட்டியில் குதித்துள்ளனர்.

---------

இதனிடையே, தேர்தல் பிரச்சார நடவடிக்கைகளில் குழந்தைகளைப் பயன்படுத்துவதைத் தடுக்க, தெளிவான விதிமுறைகள் மற்றும் வழிகாட்டுதல்களை, தேர்தல் ஆணையம் உருவாக்க வேண்டும் !

அரசியல் கட்சிகள் மற்றும் வேட்பாளர்கள் அனைவரும், அந்த விஷயங்களுக்காக குழந்தைகளைப் பயன்படுத்துவதைத் தவிர்க்க வேண்டும் எனக் கூறி, மூன்று சமூக அமைப்புகள் அவ்வாறு கோரிக்கை விடுத்துள்ளன.

குழந்தைகளை, அரசியல் பிரச்சாரங்களுக்கு பயன்படுத்துவதை அனைத்து தரப்பினரும் தவிர்க்க வேண்டும் என, முன்னதாக மலேசிய தொடர்பு, பல்லூடக ஆணையம், பலமுறை நினைவூட்டியிருந்தது.

----------

ஜொகூர் குளுவாங்கில் உள்ள வீடொன்றின் கழிவறையில், பச்சிளங்குழந்தை உயிரிழந்த நிலையில் கண்டெடுக்கப்பட்ட சம்பவம் தொடர்பில், இருவர் தடுத்து வைக்கப்படுகின்றனர் !

காதன் காதலி எனக் நம்பப்படும் அவ்வைருவரும், 7 நாட்களுக்குத் தடுத்து  வைக்கப்படுகின்றனர்.

அக்குழந்தையின் உடலில் பல கத்திக் குத்துக் காயங்கள் இருப்பது, முதற்கட்ட பரிசோதனையில் தெரியவந்துள்ள போதும், அதன் உயிரிழப்புக்கான உண்மையான காரணத்தைக் கண்டறிய விசாரணை நடைபெறுகிறது.

---------

தலைநகரில் உள்ள பேரங்காடியொன்றுக்கு மின்னஞ்சல் மூலம் விடுக்கப்பட்ட வெடிகுண்டு மிரட்டல், போலியானது என்பதை காவல்துறை உறுதிப்படுத்தியுள்ளது !

அம்மிரட்டலைத் தொடர்ந்து மேற்கொள்ளப்பட்ட சோதனையில், சந்தேகத்திற்கிடமான பொருள் அல்லது வெடிகுண்டு தொடர்பான எந்தவோர் உபகரணமும் கண்டுபிடிக்கப்படவில்லை.

---------

ஜப்பான் Kumamoto-வில் ஏற்பட்ட 7.1 அளவிலான நிலநடுக்கத்தில், உயிரிழந்தோரின் எண்ணிக்கை, 34-ஆக உயர்ந்துள்ளதாக தெரிவிக்கப்பட்டுள்ள நிலையில், இடிபாடுகளில் சிக்கியுள்ளவர்களைத் தேடி மீட்கும் பணிகள் தொடர்ந்து நடைபெறுகின்றன !

RAAGA Aaha Siranta Isai!