
நாளை ஜொகூர் சட்டமன்ற தேர்தலுக்கான வேட்புமனுத் தாக்கல் நடைபெறுகிறது !
அது சுமூகமாக நடைபெறுவதை உறுதிச் செய்ய, சில பிரதான சாலைகள் கட்டம் கட்டமாக மூடப்படுகின்றன.
சில சாலைகள் போக்குவரத்துக்குத் திருப்பிவிடப்படும் என, மாநில காவல்துறை தலைவர் தெரிவித்துள்ளார்.
Johor Baru, Kulai, Batu Pahat, Muar, Kluang ஆகிய பகுதிகளில் உள்ள சாலைகள் அதிலடங்கும்.
----------
இதனிடையே, நாளை மாலை அம்மாநிலத்தின் பெரும்பாலான பகுதிகளில் கனமழை பெய்யக்கூடும் !
காலையிலும் மழை தூற வாய்ப்புள்ளதாக, Met Malaysia தெரிவித்துள்ளது.
----------
இவ்வேளையில், நாளை வேட்புமனுத் தாக்கல் நடைபெறவுள்ள நிலையில், மொத்தம் உள்ள 56 தொகுதிகளிலும், தேர்தல் நடவடிக்கைகள், முழுவீச்சில் தொடங்கியிருக்கின்றன !
வேட்பாளர்கள் காலை 9 மணி முதல் 10 மணி வரை, குறிப்பிட்ட மையங்களில் தங்கள் பெயரை பதிவு செய்ய வேண்டும் ; பரிசோதனை பணிகள் முடிந்தவுடன், அதிகாரப்பூர்வ வேட்பாளர் பட்டியல் வெளியிடப்படும் என தேர்தல் ஆணையம் தெரிவித்துள்ளது.
----------
எதிர்வரும் ஜூலை 11-ஆம் தேதி ஜொகூரில் தேர்தல் நடைபெறுகின்ற வேளை, முன்கூட்டிய வாக்களிப்பு ஜூலை 7-ஆம் தேதி நடைபெறுகிறது !
இதனிடையே, அத்தேர்தலில் போட்டியிடும் அனைத்து அரசியல் கட்சிகளும், கண்ணியமாகவும் நாகரிகமாகவும் பிரசாரத்தை மேற்கொள்ள வேண்டுமென பிரதமர் Datuk Seri Anwar Ibrahim கேட்டுக்கொண்டுள்ளார்.
---------
நாட்டில், மின்னியல் சிகரட் பயன்பாட்டைக் கட்டுப்படுத்த, ஒரு கை தட்டினால் ஓசை எழும்பாது என்பது போலவே, அரசாங்கத்தின் பங்கு மட்டும் போதாது !
சம்பந்தப்பட்ட அனைத்து தரப்பினரின் பங்கும் இதற்கு அளப்பரியது என, மலாயா பல்கலைக்கழக மருத்துவமனையின், அவசர சிகிச்சைப் பிரிவு மூத்த ஆலோசகர் Dato Dr ரிஷா மாணிக்கம் கூறுகிறார்.
அண்மையில், இளைஞர்கள் மத்தியில் வேப் பயன்பாடு அதிகரித்து வருவதோடு, போதைப்பொருள் கலந்த வேப் திரவங்களைப் பயன்படுத்துவோரும் அதிகரித்து வருவதாக வெளியான தகவல்களைத் தொடர்ந்து, Astro Audio செய்திப் பிரிவுக்கு அளித்த பேட்டியில், அவர் இதனைத் தெரிவித்தார்.
---------
சிலாங்கூர் மற்றும் பேராக்கில், 650-க்கும் மேற்பட்டோர் வெள்ளத்தால் பாதிக்கப்பட்டு, தற்காலிக துயர்துடைப்பு மையங்களில் தங்கவைக்கப்பட்டுள்ளனர் !