Skip to main content
நாட்டில் மோசமடைகிறது புகைமூட்டம் !

 

 

சரவாக்கில், குறிப்பாக காற்றின் தரத்தைப் பாதித்து வரும் எல்லை தாண்டிய புகைமூட்டம் நீடிக்கும் வாய்ப்புள்ளதாக தெரிவிக்கப்பட்டுள்ளது !

குறிப்பாக, புகை நகரும் பாதையில் உள்ள பகுதிகள் அதிகம் பாதிக்கப்படலாம் என, METMalaysia-வின் தேசிய வானிலை மற்றும் நிலநடுக்க செயல்பாட்டு மையத்தின் தலைமை உதவி இயக்குநர் தெரிவித்துள்ளார்.

மழை பெய்தாலோ அல்லது காற்று வீசும் திசை மாறினாலோ, காற்றின் தரம் படிப்படியாக மேம்படும் என எதிர்பார்க்கப்படுகிறது, என்றாரவர்.

தற்போது நிலவும் புகைமூட்டத்துக்கு, அண்டை நாடுகளில் அதிகரித்துள்ள தீப்பற்றிய பகுதிகளின் எண்ணிக்கையும், தென் திசையில் இருந்து வீசும் காற்றின் தாக்கத்துடன் கூடிய வறண்ட வானிலையும் முக்கிய காரணங்களாக உள்ளன என, அவர் குறிப்பிட்டார்.

இதனிடையே, சரவாக் உள்ளிட்ட நாட்டில் சில பகுதிகளில், காற்றின் தரம் ஆரோக்கியமற்ற நிலையில் உள்ளதாக, API குறியீடு கூறுகிறது.

இதையடுத்து, சரவாக் செரியானில் 100-க்கும் மேற்பட்ட பள்ளிக்கூடங்கள் தற்காலிகமாக மூடப்பட்டுள்ளன.

--------

நாட்டின் விமான நிலையங்களில் பாதுகாப்பு நடவடிக்கைகளை மேம்படுத்துவதற்கான விரிவான திட்டம், அடுத்த வாரம் நடைபெறும் அமைச்சரவைக் கூட்டத்தில் முன்வைக்கப்படும் !

இத்திட்டத்தில் அரசு நிறுவனங்களுக்கு இடையிலான ஒருங்கிணைப்பு, பயிற்சி, உள்கட்டமைப்பு மற்றும் தளவாட வசதிகள் ஆகியவை இடம்பெறும்.

குறிப்பாக, விமான நிலையங்களில் மேற்கொள்ளப்படும் பாதுகாப்புச் சோதனைகள், மற்றும் அந்த உபகரணங்களை இயக்கும் பணியாளர்களுக்கு முக்கியத்துவம் அளிக்கப்படும் என, உள்துறை அமைச்சு தெரிவித்துள்ளது.

அண்மையில், இந்தோனேசியாவில், மலேசிய விமானி போதைப்பொருளுடன் சிக்கியதாகக் கூறப்படும் சம்பவம் குறித்து, அரசாங்கம் தீவிர கவனம் செலுத்தியுள்ளதாகவும், இந்த விவகாரம் கடந்த வாரம் நடைபெற்ற அமைச்சரவைக் கூட்டத்தில் விவாதிக்கப்பட்டதாகவும், அமைச்சு கூறியது.

---------

சிலாங்கூர் KUALA LANGAT-டில், இம்மாத தொடக்கத்தில், மதுபோதையில் வாகனத்தைச் செலுத்தி, முதியவரின் உயிரை பறித்ததாகக் கூறப்படும் இளைஞன் மீது, நீதிமன்றத்தில் குற்றஞ்சாட்டப்பட்டுள்ளது !

அச்சம்பவம் தொடர்பான காட்சிகள் அடங்கிய காணொலி, முன்னதாக சமூக ஊடகங்களில் பரவலானது.

--------

திரங்கானுவில், கடந்த மாத இறுதியில், நால்வரின் உயிரைப் பறித்த மோட்டார்சைக்கிள் பேரணி விபத்து தொடர்பான விசாரணை அறிக்கை, அரச தரப்பு துணை தலைமை வழக்கறிஞரிடம் சமர்ப்பிக்கப்பட்டுள்ளது !

RAAGA Aaha Siranta Isai!