
நெகிரி செம்பிலான் மாநில MBராகப் பதவியேற்றுள்ளார் Datuk Haji Ismail Bin Lasim!
அந்த Kuala Pilah UMNO தலைவரின் பதவியேட்புச் சடங்கு சற்று முன்னர் மாநில சமஸ்தான அதிபதி முன்னிலையில் நடந்து முடிந்தது.
நெகிரி செம்பிலான் மாநில சட்டமன்ற தேர்தலில் நேற்று போட்டியிட்ட 25 தொகுதிகளில் 18டில் தேசிய முன்னணி வெற்றிப் பெற்றது.
அதன் அதிகாரப்பூர்வமற்ற பங்காளியான பெரிக்காத்தான் நேஷ்னல் ஏழு இடங்களில் வெற்றிப் பெற்றது.
இந்நிலையில் மொத்தம் 36 தொகுதிகளில் ஆட்சிமையக்கத் தேவையான 19 தொகுதிகள் பெரும்பான்மையைத் தாண்டி, 25 இடங்களை அவ்விரு கட்சிகளும் பெற்றன.
எதிர்கட்சியாகிவிட்ட பக்காத்தான் ஹராப்பான் 11 இடங்களில் மட்டுமே வெற்றிப் பெற்றது.
2018ஆம் ஆண்டுக்குப் பிறகு தேசிய முன்னணி MB பதவிக்குத் திரும்புவது குறிப்பிடத்தக்கது.
-----
போதை பொருள் கடத்தியதாகக் கூறப்படும் மலேசிய விமானி ஒருவர் இந்தோனேசியாவில் கைது செய்யப்பட்டதை அடுத்து, பாதுகாப்பு விதிமுறைகள் சரியாகப் பின்பற்றப்பட்டிருக்கின்றனவா என்பது குறித்து ஆராயத் தொடங்கியிருக்கிறது மலேசிய விமான போக்குவரத்து அமைப்பு.
-----
குவாலா திரங்காணுவில் மூன்றே மணி நேரங்களில் பெரும் லாபத்தை ஏற்படுத்தும் என, Facebookகில் பார்த்த இல்லாத முதலீட்டுத் திட்ட விளம்பரத்தை நம்பி, வணிகர் ஒருவர் கிட்டத்தட்ட மூன்று லட்சம் ரிங்கிட்டைப் பறிகொடுத்துள்ளார்.
-----
Hulu Selangorரில் உள்ள பள்ளி ஒன்றின் ஆசிரியர் அறையில், ஆசிரையை ஒருவர் இறந்து கிடக்கக் காணப்பட்டார்.
-----
சிலாங்கூர், Sungai Bulohவில் 11 வயது சிறுமிக்குப் பாலியல் தொல்லை கொடுத்ததாகக் கூறப்படும் வெளிநாட்டவருக்குக் காவல் துறை வலை வீசியிருக்கிறது.