Skip to main content
நேபாள பேரிடர்; 54 மலேசியர்கள் விவகாரத்தில் சட்ட நடைமுறை !

 

நேபாள வெள்ளப் பேரிடரில் காணாமல் போன 54 மலேசியர்களையும் உயிரிழந்தவர்களாக அறிவிக்கும் நடைமுறை, அந்நாட்டின் சட்ட விதிமுறைகளுக்கு உட்பட்டது !

உள்துறை அமைச்சர் Datuk Seri Saifuddin Nasution Ismail அவ்வாறு தெரிவித்துள்ளார்.

நேபாள அதிகாரிகள், முதலில் இதனை உறுதிப்படுத்திய பின்னரே, மலேசிய தேசியப் பதிவுத் துறை அதிகாரப்பூர்வ இறப்புச் சான்றிதழ்களை வழங்க முடியும் என்றும் அவர் விளக்கினார்.

இதனிடையே, பிரதமர் டத்தோஸ்ரீ அன்வார் இப்ராஹிமின் முயற்சியைத் தொடர்ந்து, பேரிடரில் காணாமல் போனவர்களை உயிரிழந்தவர்களாக அறிவிப்பதற்கான சிறப்பு உத்தரவுக்கு, நேபாள அரசாங்கம் ஒப்புதல் அளித்துள்ளதாகவும் அவர் குறிப்பிட்டுள்ளார்.

---------

இவ்வேளையில், நேபாள பேரிடரால் பாதிக்கப்பட்ட 54 மலேசியர்களின் குடும்பங்களுக்கான நிதியுதவியை,  மனிதவள அமைச்சர் டத்தோ ஸ்ரீ R.ரமணன் வழங்கியுள்ளார் !

அரசாங்கத்தின் சார்பில், ஒவ்வொரு குடும்பத்துக்கும் தலா 10 ஆயிரம் ரிங்கிட் வழங்கப்பட்ட நிலையில், அதற்காக, மொத்தம் 5 லட்சத்து 40 ஆயிரம் ரிங்கிட் ஒதுக்கப்பட்டது.

கடந்த ஆகஸ்ட் மாத இறுதியில் நேபாளத்தில் நிலச்சரிவால் ஏற்பட்ட பெரு வெள்ளத்தைத் தொடர்ந்து, 54 மலேசியர்களைத் தொடர்புகொள்ள முடியாத நிலை ஏற்பட்டது.

---------

அடுத்தாண்டு முதல் அரசாங்கம் வழங்கவுள்ள, 200 ரிங்கிட் உதவிநிதியைப் பெற, பெற்றோர் தங்களது பிள்ளைகளுடன் பள்ளிக்குச் செல்ல வேண்டும் என பிரதமர் கேட்டுக்கொண்டுள்ளார் !

இதன் வழி, பெற்றோர்கள், ஆசிரியர்களைச் சந்தித்து பிள்ளைகளின் முன்னேற்றம் குறித்து அறிந்துகொள்ள முடியும் என Datuk Seri Anwar Ibrahim கூறினார்.

--------

இதனிடையே, ஆண்டிறுதி பள்ளி விடுமுறையின்போது, மாணவர்கள் குறைந்தது இரண்டு புத்தகங்களையாவது வாசிக்க வேண்டும் என Datuk Seri Anwar Ibrahim வலியுறுத்தியுள்ளார் !

செயற்கை நுண்ணறிவு தொழில்நுட்பப் பயன்பாடு அதிகரித்தாலும், இளைய தலைமுறையினரிடையே வாசிப்புப் பழக்கத்தைத் தொடர்ந்து வளர்க்க வேண்டும் என அவர் கூறினார்.

--------

தேசிய அவசரகால முன்னெச்சரிக்கை முறையான MySiren-னின் நாடு தழுவிய சோதனை, வரும் ஞாயிற்றுக்கிழமை நடத்தப்படவுள்ளது !

காலை மணி 10.10 மணி முதல் 10.30 வரை நடைபெறும் இந்தச் சோதனையின்போது, 4G மற்றும் 5G சேவைகள் மூலம், கைப்பேசிகளுக்கு அவசரகால எச்சரிக்கை அறிவிப்புகள் நேரடியாக அனுப்பப்படும்.

மலேசியத் தொடர்பு, பல்லூடக ஆணையம், இந்த முறையை செயல்படுத்தி வருகிறது.

இந்த எச்சரிக்கை அறிவிப்பைப் பெற, பொதுமக்கள் தங்களது கைப்பேசிகளில் Emergency Alerts வசதியை, இயக்கி வைத்திருக்கும்படி அறிவுறுத்தப்பட்டுள்ளனர்.

---------

Astro Ulagam ஏற்பாட்டில் நடத்தப்பட்ட இளம் செய்தி வாசிப்பாளர் தேடலின் இரண்டாம் கட்டத்திற்கு 25 பங்கேற்பாளர்கள் தேர்வாகியுள்ளனர்!

இப்போலிருந்து இம்மாதம் 30ஆம் தேதி வரை தங்களுக்கு விருப்பமான பங்கேற்பாளருக்குப் பொதுமக்கள் வாக்களிக்கலாம்.

வாக்களிப்போர் ஒவ்வொருவருக்கும் நாளுக்கு ஐம்பது வாக்குகள் வரை செலுத்த அனுமதி உண்டு.

வாக்களிப்புத் தளம் உள்ளிட்ட மேல் விவரங்களுக்கு Astro உலகம் அகப்பக்கத்தை வலம் வாருங்கள். 

RAAGA Aaha Siranta Isai!