
நேபாளத்தில் ஏற்பட்ட வெள்ளப் பேரிடரைத் தொடர்ந்து காணாமல் போயுள்ள 55 மலேசியர்களின் நிலையை உறுதிப்படுத்தும் நடவடிக்கைகளை விரைவுபடுத்த உதவ, அந்நாட்டுப் பிரதமர் ஒப்புக்கொண்டுள்ளார் !
இதையடுத்து, குறிப்பாக சட்ட மற்றும் நீதிமன்ற நடைமுறைகள் தொடர்பாக, நேபாளம் அதிகாரிகளுடன் மேலதிக கலந்துரையாடல்களை நடத்தும்படி, சட்டத்துறை அலுவலகத்துக்கு பிரதமர் உத்தரவிட்டுள்ளதாக, அரசாங்கப் பேச்சாளர் Datuk Seri Fahmi Fadzil தெரிவித்துள்ளார்.
காணாமல் போன மலேசியர்களின் நிலையை விரைவாக உறுதிப்படுத்த, அந்நடவடிக்கை அவசியமாவதாக அவர் கூறினார்.
கடந்த மாத இறுதியில் அங்கு பெருக்கெடுத்து ஓடிய வெள்ளத்தில் சிக்கி, ஆயிரத்துக்கும் மேற்பட்டோர் உயிரிழந்தனர்.
----------
Negeri Sembilan Kuala Pilah பள்ளி விடுதியில் உயிரிழந்த, 14 வயது மாணவர், 2 நான்காம் படிவ மாணவர்களால் ரப்பர் குழாயால் பலமுறை தாக்கப்பட்டதாக காவல்துறை தெரிவித்துள்ளது !
Vape பயன்படுத்தியதாக கூறப்படும் பாதிக்கப்பட்ட மாணவருக்கு, மூத்த மாணவர்கள் தண்டனை என்ற பெயரில் தாக்கியதாக சந்தேகிக்கப்படும் நிலையில், அவர் பின்னர் மயங்கி மருத்துவமனைக்கு கொண்டு செல்லப்பட்டார்.
பிரேதப் பரிசோதனையில், அவரின் மரணத்துக்கான காரணம் இன்னும் உறுதிப்படுத்தப்படாத நிலையில், இதுவரை 69 பேரிடம், காவல்துறை வாக்குமூலம் பெற்றுள்ளது.
---------
இதனிடையே, அம்மாணவர் உயிரிழந்த சம்பவம் தொடர்பில் கைது செய்யப்பட்டுள்ள முதல் சந்தேக நபரால், தாங்களும் முன்பு பகடிவதைக்கு உள்ளானதாக, ஐந்து மாணவர்கள் தெரிவித்துள்ளனர் !
எனவே, விசாரணைக்கு உதவ மேலும் சில பேரிடம் வாக்குமூலம் பதிவு செய்யப்படவுள்ளதாக காவல்துறை கூறியது.
---------
கெடா, பினாங்கு, பேராக், கோலாலம்பூர் உட்பட, சில மாநிலங்களின் பெரும்பாலான பகுதிகளில், இன்றிரவு 7 மணி வரை, இடியுடன் கூடிய கனமழை பெய்யலாம் என, மலேசிய வானிலை ஆய்வு மையம் தெரிவித்துள்ளது !
---------
தொலைக்காட்சி மற்றும் வானொலியில் செய்தி வாசிக்க விரும்பும் 8 முதல் 12 வயது தமிழ்ப்பேசும் மாணவர்களுக்காக, Astro உலகம் இளம் செய்தி வாசிப்பாளர் தேடலைத் தொடங்கியுள்ளது!
ஐந்து முதன்மை வெற்றியாளர்களுக்கு தலா ஆயிரம் ரிங்கிட் ரொக்கப் பரிசுடன், Astro செய்திகள் மற்றும் Astro Audio செய்திகளில் செய்தி வாசிக்கும் வாய்ப்பும் வழங்கப்படும்.
மேலும், வெற்றியாளர்கள் Astro செய்தி மற்றும் Astro Audio செய்தி வாசிப்பாளர்களை நேரில் சந்திக்கும் வாய்ப்பைப் பெறுவதுடன், விண்ணப்பிக்கவும் மேலதிக தகவல்களுக்கும் Astro உலகம் அகப்பக்கத்தை நாடலாம்.