Skip to main content
நேப்பாளம் வெள்ளம் ; மலேசியர்கள் இன்னும் தேடப்படுகின்றனர் !

 

நேப்பாள அதிகாரிகளால் மீட்கப்பட்ட 31 வெளிநாட்டவர்களில் மலேசியர்களும் உள்ளனரா என்பது குறித்து, இன்னும் உறுதியாகத் தெரியவில்லை !

வெளியுறவு அமைச்சு உறுதியான தகவலுக்கு காத்திருக்கின்றது.

இதனிடையே, சில மலேசியர்கள், சீனா மற்றும் இந்தியா வழியாக பாதிக்கப்பட்ட பகுதிகளுக்குள் சென்றிருக்கலாம் என்ற தகவலும் கிடைத்துள்ளதாக அமைச்சு கூறியது.

நேபாளத்தில் வசிக்கும் அல்லது அந்நாட்டின் வழியாக பயணம் செய்யும் மலேசியர்கள், குறிப்பாக பாதிக்கப்பட்ட பகுதிகளில் அல்லது அவற்றுக்கு அருகில் இருப்பவர்கள், மிகவும் விழிப்புடன் இருக்க வேண்டும்.

உள்ளூர் அதிகாரிகள் வழங்கும் அனைத்து அறிவுறுத்தல்களையும் பின்பற்றி நடந்துகொள்ளும்படியும்  Wisma Putra கேட்டுக்கொண்டுள்ளது.

நிலச்சரிவு காரணத்தால் ஏற்பட்ட பெரு வெள்ளத்தில் உயிரிழந்தவர்களின் எண்ணிக்கை 450-தைக் கடந்துள்ள நிலையில், ஆயிரத்துக்கும் மேற்பட்டோர் காணாமல் போயுள்ளனர்.  

----------

வெளிநாட்டு தொழிலாளர்களை வேலைக்கெடுக்கும் விவகாரத்தில் ஊழல் செய்ததாக, தம்மீது சுமத்தப்பட்ட குற்றச்சாட்டை, முன்னாள் மனிதவள அமைச்சர் Datuk Seri M.சரவணன் மறுத்துள்ளார் !

நான்காண்டுகளுக்கு முன்பு தாம் அமைச்சர் பதவியில் இருந்த போது, பத்து லட்சம் ரிங்கிட் கையூட்டு வாங்கியதாக, இன்று காலை KL Sessions நீதிமன்றத்தில் அவர் மீது குற்றம் சுமத்தப்பட்டது.

வெளிநாட்டுத் தொழிலாளர்கள் இட ஒதுக்கீடு தொடர்பில், மூன்று வெவ்வேறு தரப்புகளிடமிருந்து அப்பணத்தை வாங்கியதாக அக்குற்றச்சாட்டில் குறிப்பிடப்பட்டிருந்தது.

----------

நாட்டில் பெரும்பாலான பகுதிகளில் புகை சூழ்ந்துள்ளது !

சுமார் 20 இடங்களில், காற்றின் தரத்தைக் குறிக்கும் API குறியீடு 100-ரைக் கடந்து, ஆரோக்கியமற்ற அளவில் உள்ளது.

சரவாக், கோலாலம்பூர், பினாங்கு உள்ளிட்ட மாநிலங்களின், பெரும்பாலான பகுதிகள், புகைமூட்டமாக உள்ளன.

---------

பேராக் Temenggor-ரில் உள்ள நிலைமையை, மலேசிய வானிலை ஆய்வு மையம், தொடர்ந்து உன்னிப்பாக கண்காணிக்கும் !

அங்கு நேற்று நள்ளிரவு வாக்கில், 3.4 ரிக்டர் அளவிலான லேசான நிலநடுக்கம் ஏற்பட்டுள்ளதே அதற்குக் காரணம்.

---------

69-ஆவது தேசிய தின கொண்டாட்டத்தை முன்னிட்டு, ஆகஸ்டு 31-ஆம் தேதி, மலேசியர்களுக்கு பினாங்கில் Ferry சேவை இலவசமாக வழங்கப்படுகிறது !

---------

பள்ளி விடுமுறை மற்றும் தேசிய தின விடுமுறையை முன்னிட்டு, மேற்குக்கரை விரைவுச்சாலையில், 1 லட்சத்து 50-ஆயிரத்துக்கும் அதிகமான வாகனங்கள் பயணிக்கும் என கணிக்கப்பட்டுள்ளது ! 

RAAGA Aaha Siranta Isai!