Skip to main content
நெருங்கியவர்களுக்கிடையே அதிக கொலையா ?

 

கெடா பாயா பெசாரில் நிகழ்ந்த கொலை சம்பவத்துக்குப் பிறகு, புக்கிட் அமான் சில அதிர்ச்சியளிக்கும் தரவுகளை வெளியிட்டுள்ளது !

2017-ஆம் ஆண்டு முதல் கடந்த ஜூன் மாதம் வரை, நாட்டில் நெருங்கிய உறவில் இருந்தவர்களுக்கு இடையே, 165 கொலைச் சம்பவங்கள் பதிவாகியுள்ளன.

அவற்றில் 144 சம்பவங்கள், முன்கூட்டியே திட்டமிடப்படாமல் திடீரென நடைபெற்றது.

பெரும்பாலான கொலைச் சம்பவங்கள், கருத்து வேறுபாடு, பொறாமை, தகராறு போன்றவை தீவிரமடைந்ததைத் தொடர்ந்து, திடீரென நடைபெற்றதாக தெரிவிக்கப்பட்டுள்ளது.

இவ்வார தொடக்கத்தில், தாமான் தீராமில் உள்ள வீட்டில், காரணமாக இருக்கலாம் என நம்பப்படும் நிலையில், கணவர் தனது மனைவியை 13 முறை கத்தியால் குத்தி கொலை செய்த சம்பவம், பரபரப்பை ஏற்படுத்தியது.

---------

தற்போது நாட்டில் நிலவும் புகைமூட்டம் காரணமாக, திறந்தவெளியில் நடைபெறும் நிகழ்ச்சிகளை, ஏற்பாட்டாளர்கள் தேவைக்கேற்ப மாற்றியமைக்க வேண்டும் !

குறிப்பாக, காற்று மாசுபாட்டின் அளவு மேலும் மோசமடைந்தால், நிகழ்ச்சிகளை, மூடப்பட்ட இடங்களுக்கு மாற்றும்படி, இயற்கை வளம், சுற்றுச்சூழல் நிலைத்தன்மை அமைச்சு வலியுறுத்தியுள்ளது.

குறிப்பாக காற்றுத் தரக் குறியீடு ஆரோக்கியமற்ற நிலையில் இருக்கும்போது, பொதுமக்கள் மாசடைந்த காற்றைச் சுவாசிப்பதைத் தவிர்க்க, அந்நடவடிக்கை அவசியமாவதாக, என அமைச்சு கூறியது.

தற்போதைய நிலை மற்றும் புகைமூட்ட தீவிரத்தைப் பொறுத்து, அமைச்சின் புகைமூட்ட நடவடிக்கைத் திட்டம் மற்றும் நிர்ணயிக்கப்பட்ட SOP-க்கு ஏற்ப, உரிய நடவடிக்கைகள் எடுக்கப்படும்.

----------

இதனிடையே, கெடாவில் கூலிம், சுங்கை பட்டாணி, பினாங்கு Balik Pulau, Seberang Jaya உட்பட 40 பகுதிகளில், காற்றின் தரத்தைக் குறிக்கும் API குறியீடு, ஆரோக்கியமற்ற அளவில் உள்ளது !  

----------

ம.இ.காவின் மூத்த தலைவரும், முன்னாள் சட்டமன்ற உறுப்பினருமான டத்தோ வி. எல். காந்தன், தனது 89-ஆவது வயதில் காலமானார் !

-----------

தலைநகரில், மூன்று வாகனங்கள் மீது மோதிய காரோட்டுநர், நான்கு வகையான போதைப்பொருட்களைப் பயன்படுத்தியிருந்தது சோதனையில் தெரியவந்துள்ளதாக, அதிகாரிகள் தெரிவித்துள்ளனர் !

--------

Yayasan Warisan Anak Selangor எனப்படும் YAWAS மூலம், Skim Mesra திட்டத்திற்கான புதிய விண்ணப்பங்களை, நாளை முதல், சிலாங்கூர் அரசாங்கம் அதிகாரப்பூர்வமாகத் தொடங்குகிறது !

அதற்காக 50 ஆயிரம் பேருக்கான சிறப்பு ஒதுக்கீடு நிர்ணயிக்கப்பட்டுள்ளது.

பிறந்த மாதத்தை முன்னிட்டு, மூத்த குடிமக்கள் மற்றும் மாற்றுத்திறனாளிகளுக்கு, ஆண்டுதோறும் 150 ரிங்கிட் நிதியுதவி வழங்கும் திட்டமாக, Skim Mesra செயல்படுகிறது.

RAAGA Aaha Siranta Isai!