
திரவ வகை நிக்கோட்டின் மற்றும் நிக்கோட்டின் அடங்கிய மின்னியல் சிகரட்டுகள் தொடர்ந்து தடைச்செய்யப்பட்ட பொருட்கள் அல்லது நச்சுப் பொருட்கள் பட்டியலில் இருக்குமா என்பது குறித்து அரசாங்கம் விளக்கமளிக்க வேண்டும்!
மலேசிய மருத்துவச் சங்கம் அக்கோரிக்கையை முன்வைத்துள்ளது.
2023ஆம் ஆண்டில் அப்பொருட்கள் 1952 நச்சுப்பொருள் சட்டத்தின் கீழ், நச்சுப் பொருட்கள் பட்டியலில் இருந்து விலக்கு அளிக்கப்பட்டது செல்லாது என, உயர் நீதிமன்றம் அறிவித்திருப்பதை அடுத்து MMA அவ்வாறு கேட்டுக் கொண்டுள்ளது.
திரவ நிக்கோட்டினை நச்சுப் பொருட்களின் பட்டியலிலிருந்து நீக்கியதன் மூலம், அப்போது சுகாதார அமைச்சராக இருந்த DS Dr Zalihah Mustafah சட்டவிரோதமாகச் செயல்பட்டிருக்கிறார் என உயர் நீதிமன்றம் கடந்த வெள்ளிக்கிழமை தீர்ப்பளித்தது.
------
Congo மற்றும் Ugandaவில் பரவி வரும் Ebola வைரஸ் தொற்று மலேசியாவில் பதிவாகவில்லை!
எனினும் அனைத்துலக பயணங்களால் அத்தொற்று பரவக்கூடிய அபாயம் குறித்து, கூடுதல் எச்சரிக்கையுடன் இருக்கிறது சுகாதார அமைச்சு.
அவ்விரு நாடுகளில் இருந்து மலேசியா வருவோரை சோதனையிட்டு, அவர்களை அணுக்கமாகக் கண்காணிக்கும் வேலைகள் தீவிரமாகியிருக்கின்றன.
------
நெகிரி செம்பிலான், நீலாயில் இணைய முதலீட்டு மோசடியில் சிக்கிய பெண் ஒருவர், ஒரு லட்சத்து 63 ஆயிரம் ரிங்கிட்டைப் பறிகொடுத்துள்ளார்.
லாபப் பணத்தை ஏன் தம்மால் பட்டுவாடா செய்ய முடியவில்லை என ChatGPT-யிடம் கேட்ட போது, அச்செயலி கூறியதை வைத்து தான் தாம் ஏமாற்றப்பட்ட விஷியமே அப்பெண்ணுக்குத் தெரிய வந்துள்ளது.
-------
Empat suspek bunuh pemuda OKU didakwa mahkamah pagi ini
கிளாந்தான், Bachokகில் மாற்றுத்திறனாளி இளைஞன் கொலை செய்யப்பட்ட சம்பவம் தொடர்பில் கைதான நான்கு சந்தேக நபர் மீது இன்று நீதிமன்றத்தில் குற்றஞ்சாட்டப்பட்டது.
------
Damansara Shah Alam விரைவுச் சாலையில் எதிர்திசையில் காரை ஓட்டிச் சென்ற 80 வயது மதிக்கத்தக்க மூதாட்டியைக் காவல் துறை கைது செய்துள்ளது.