
Datuk Seri Najib Tun Razakகின் வீட்டுக் காவல் தொடர்பான எல்லா கேள்விகளுக்கும் இன்று பதில் கிடைக்கும் என எதிர்ப்பார்க்கப்படுகிறது!
அதன் தொடர்பிலான துல்லிய விவரங்கள், நிபந்தனைகள் உள்ளிட்ட சகல தகவல்களையும் தெளிவாக நாடாளுமன்றத்தில் விளக்க, உள்துறை அமைச்சர் அட்டவணையிடப்பட்டுள்ளார்.
இதனிடையே அந்த முன்னாள் பிரதமரின் வீட்டுக் காவல் தொடர்பான பாதுகாப்பு ஏற்பாடுகள் அனைத்திற்கும், சிறைத்துறையே முழு பொறுப்பு.
அவ்வப்போது பாதுகாப்பு வழங்குதல், கண்காணித்தல் உள்ளிட்ட உதவிகளை காவல் துறையும் வழங்கும் தேசிய காவல் படை தலைவர் தெரிவித்தார்.
-----
நாட்டில் இரு மாநிலங்களில் ஆயிரத்து நானூருக்கும் மேற்பட்டோர் வெள்ளத்தால் பாதிக்கப்பட்டுள்ளனர்!
ஆகக் கடைசி தகவல்படி சிலாங்கூரில் ஆயிரத்து நூருக்கும் அதிகமானோரும், பேராவில் முன்னூரு பேரும் தற்காலிக துயர் துடைப்பு மையங்களில் தங்க வைக்கப்பட்டுள்ளனர்.
-----
வரும் சனிக்கிழமை மலாக்கா மாநில தேர்தலில் வாக்களிக்கச் செல்வோர் காலையில் நேரமாக சென்று தங்களின் கடமையை ஆற்றும்படி கேட்டுக் கொள்ளப்படுகின்றனர்.
மாலையில் மழை பெய்யும் என எதிர்ப்பார்க்கப்படுவதாக, வாக்களிப்பு சுமூகமாக நடக்க அது அவசியம் என தேர்தல் ஆணையம் வலியுறுத்தியது.
-----
கெப்போஙில், காவல் அதிகாரி ஒருவருக்குக் காயம் ஏற்படும் அளவுக்கு நிகழ்த்தப்பட்ட பாராங்கத்தி தாக்குதல் ஒன்றை பிரதமர் வன்மையாகக் கண்டித்துள்ளார்!
எந்த விதமான வன்முறைகளும், குறிப்பாக அமுலாக்க அதிகாரிகள் மீதான வன்முறைகளும் என்றுமே ஏற்றுக் கொள்ளப்படாது என அவர் சாடினார்.
----
ஜொகூர், Skudaiயில் பிரதான சாலையில் தீபாவளிக்குப் பட்டாசு வெடித்ததாக, இடைநிலை பள்ளி மாணவர் உள்ளிட்ட நான்கு ஆடவர்கள் மீது நீதிமன்றத்தில் குற்றம் சாட்டப்பட்டுள்ளது.