
Datuk Seri Najib Tun Razak-குக்கு வழங்கப்பட்டுள்ள நிபந்தனையுடனான மன்னிப்பு, ஊழல் மற்றும் அதிகார துஷ்பிரயோகத்தை எதிர்த்துப் போராடும், அரசாங்கத்தின் நிலைப்பாட்டை எந்த வகையிலும் பாதிக்காது !
பிரதமர் Datuk Seri Anwar Ibrahim அவ்வாறு தெரிவித்துள்ளார்.
Najib தொடர்பான நிலுவையில் உள்ள வழக்குகள் உட்பட, அனைத்து ஊழல் வழக்குகளும், சட்டப்படி தொடர்ந்து நடைபெற வேண்டும் என்றும் Anwar கூறியுள்ளார்.
ஊழல் மற்றும் அதிகார துஷ்பிரயோகத்தை எதிர்கொள்வதில் மலேசியா தொடர்ந்து உறுதியுடன் இருக்க வேண்டும் என்றும், அதற்கு பொதுமக்களின் ஆதரவு அவசியம் என்றும் Anwar சொன்னார்.
இதனிடையே, மன்னிப்பு வாரியத்தின் 64-ஆவது கூட்டத்தில் எடுக்கப்பட்ட முடிவின்படி, Najib-புக்கு 2028-ஆம் ஆண்டு ஆகஸ்ட் 23-ஆம் தேதி வரை, வீட்டுக் காவலில் எஞ்சிய தண்டனையை கழிக்க அனுமதி வழங்கப்பட்டுள்ளது.
அதற்கு, அவர் முதலில் 50 மில்லியன் ரிங்கிட் அபராதம் செலுத்த வேண்டும்.
இதனிடையே, 1MDB ஊழல் தொடர்பான இரண்டாவது வழக்கிலும், Najib குற்றவாளி எனத் தீர்ப்பளிக்கப்பட்டுள்ளது.
அந்தத் தீர்ப்புக்கு எதிரான மேல்முறையீடு, இன்னும் நிலுவையில் உள்ளது.
1MDB விவகாரம் தொடர்பில் அவர் மீது, சிவில் வழக்குகளும் தொடரப்பட்டுள்ளன.
---------
நாடு முழுவதும் சில பகுதிகளில் காற்றின் தரம் பாதிக்கப்பட்டுள்ள நிலையில், சிலாங்கூர் Johan Setia-வில் நிலைமை மோசமாக உள்ளது !
அங்கு, காற்றின் தரத்தைக் குறிக்கும் API குறியீடு, 180-க்கும் மேல் இருக்கின்றது.
Negeri Sembilan Nilai-யிலும் காற்றின் தரம் பாதிக்கப்பட்டிருக்கிறது.
கோலாலம்பூரில் Cheras மற்றும் Batu Muda பகுதிகளும் புகைமூட்டமாக உள்ளன.
பேராக்கில் சில இடங்களிலும், காற்று சரியில்லாமல் உள்ளது.
--------
ஜொகூர் Simpang Renggam-மில், நால்வர் உயிரிழக்கக் காரணமான, பல வாகனங்களை உட்படுத்திய விபத்தை ஏற்படுத்தியதாகக் கூறப்படும் 19 வயது வாலிபன் மீது குற்றஞ்சாட்டப்பட்டுள்ளது !
கவனக்குறைவாகவும், ஆபத்தான முறையிலும் வாகனம் செலுத்தியதாக, தம்மீது சுமத்தப்பட்ட குற்றச்சாட்டுகளை, அவன் மறுத்தான்.
ஜூன் தொடக்கத்தில் நிகழ்ந்த அவ்விபத்தில், ஒரே குடும்பத்தை சேர்ந்த நால்வர் உயிரிழந்த வேளை, அந்த வாலிபனோடு அபாயமான முறையில் வாகனத்தை ஓட்டிச் சென்ற அவனது சகோரனும் விபத்தில் சிக்கி, மருத்துவமனைக்குக் கொண்டு செல்லப்பட்டபோது உயிரிழந்தான்.
----------
மற்றொரு பக்கம், ஜொகூர் Batu Pahat-டில், போதைப்பொருள் பழக்கத்தில் இருந்ததாக நம்பப்படும் ஒரு பதின்ம வயது இளைஞன், தனது மைத்துனரை மூன்று முறை கத்தியால் குத்தியதாகக் கூறப்படுவதால், அவன் ஒரு வாரத்திற்கு தடுத்து வைக்கப்பட்டுள்ளான் !