Skip to main content
நஜிப் இன்னும் அபராதம் செலுத்தவில்லை !

 

முன்னாள் பிரதமர் Datuk Sri Najib Razak, நிபந்தனையுடனான மன்னிப்பின் கீழ் விதிக்கப்பட்ட, 50 மில்லியன் ரிங்கிட் அபராதத்தை இதுவரை செலுத்தவில்லை !

அந்த அபராதத்தைச் செலுத்திய பின்னரே, எஞ்சிய சிறைத்தண்டனையை வீட்டுக்காவலில் அனுபவிக்க முடியும் என, சட்டத்துறைத் தலைவர் தெரிவித்துள்ளார்.

அபராதம் செலுத்தப்பட்ட பின்னர், நஜிப் எப்போது வீட்டுக்கு மாற்றப்படுவார் என்பதைத் துல்லியமாகக் கூற முடியாது.

அதற்கான நடைமுறைகளுக்கு, சிறிது காலம் எடுக்கலாம் என, அவர் கூறியுள்ளார்.

--------

பேராக் ஈப்போவில், 12 மோட்டார் சைக்கிள்கள் மற்றும் மூன்று கார்கள் மோதிக்கொண்ட சாலை விபத்தில் உயிரிழந்த மூவரில் இருவரின் குடும்பத்தினர், பெர்கேசோவின் 24 மணி நேர விபத்து பாதுகாப்புத் திட்டத்தின் கீழ், நிதியுதவிக்கு தகுதி பெற்றுள்ளனர் !

பெர்கேசோவில், அவ்விருவரின் பங்களிப்பு இருந்ததாக தெரிவிக்கப்பட்டுள்ளது.

நேற்று முன்தினம் நிகழ்ந்த அந்த விபத்தில், 3 மோட்டார்சைக்கிள் ஓட்டுநர்கள் உயிரிழந்தனர்.  

----------

கெடா பாயா பெசார் தாமான் தீராமில், மனைவியை 13 முறை கத்தியால் குத்தி கொலை செய்ததாகக் கூறப்படும் கணவர் மீது நீதிமன்றத்தில் குற்றஞ்சாட்டப்பட்டுள்ளது !  

குற்றம் நிரூபிக்கப்பட்டால், அவருக்கு மரண தண்டனை அல்லது 30 முதல் 40 ஆண்டுகள் வரை சிறைத்தண்டனையும், 12 பிரம்படிகளும் விதிக்கப்படலாம்.  

--------

Astro Audio-வின் KITA FM, ஓட்டப் பிரசாரத்தின் வழி, அதிகபட்ச மொத்தத் தூரத்தைக் கடந்து, மலேசிய சாதனைப் புத்தகத்தில் இடம்பிடித்துள்ளது!

நாடு முழுவதும் பல்வேறு இடங்களில் நடைபெற்ற இந்த ஓட்டப் பிரசாரம், மொத்தம் 63 கிலோமீட்டர் தூரத்தை உட்படுத்தியது.

அது, 63-ஆவது மலேசிய தினத்தைக் குறிக்கும் வகையில் ஏற்பாடு செய்யப்பட்டது.

KITA FM, நாடு முழுவதும் உள்ள நேயர்களை Astro Audio-வின் 13 வானொலிகளுடன் மேலும் நெருக்கமாக்கும் நோக்கில் தொடங்கப்பட்டதாக, Astro Audio இயக்குநர் பிரியா தர்ஷினி பிரபாகரன் தெரிவித்துள்ளார்.

இந்த முயற்சி எதிர்காலத்தில் மேலும் விரிவுபடுத்தப்படலாம் என்றும் அவர் கூறினார்.

தேசிய தினக் கொண்டாட்டத்துக்கு முன்னதாக KITA FM தொடங்கப்பட்டது.

RAAGA Aaha Siranta Isai!