Now Playing

{{nowplay.song.artist}}

{{nowplay.song.track}}

Now playing

RAAGA

Aaha… Sirantha Isai!

Current Show

{{currentshow.name}}

{{currentshow.description}}

Current Show

RAAGA

Aaha… Sirantha Isai!

{{nowplay.song.artist}} Album Art Now playing

{{nowplay.song.track}}

{{nowplay.song.artist}}

Album Art Now playing

RAAGA

Aaha… Sirantha Isai!

{{currentshow.name}} {{currentshow.name}} Current Show

{{currentshow.name}}

{{currentshow.description}}

RAAGA Current Show

RAAGA

Aaha… Sirantha Isai!

← Back to list

i-Sinar தொகை கட்டம் கட்டமாக வழங்கப்படுகிறது!

Apr 09, 2021


ஊழியர் சேமநிதி வாரியத்தின் I-sinar திட்ட விண்ணப்பத்தாரர்களுக்கு, ஏப்ரல் மாதத்திற்கான தொகை கட்டம் கட்டமாக, ஏப்ரல் 16ஆம் தேதி வரை செலுத்தப்படும்.

i-sinar தொகை கட்டம் கட்டமாக வழங்கப்படுகிறது!விண்ணப்பத்தாரர்களின் வங்கி நடைமுறைகளை பொறுத்து, அத்தொகை ஒன்றில் இருந்து 5 வேலை நாட்களுக்குள் அவர்களது கணக்கில் சேர்க்கப்படும் என EPF அறிவித்துள்ளது.

ஏப்ரல் மாதத்திற்கான தொகை இன்னும் தங்களுக்கு கிடைக்கவில்லை என பல விண்ணப்பத்தாரர்கள் கூறி வருவது தொடர்பில் EPF அவ்விளக்கத்தை கொடுத்துள்ளது.

 

நகை விற்பனை மோசடி!

இணையம் வழி, நகை விற்பனை மோசடி குறித்து கவனமாக இருக்குமாறு, Bukit Aman பொது மக்களை நினைவுறுத்தியிருக்கிறது!

இவ்வாண்டின் முதல் மூன்று மாதங்களில், 2 லட்சம் ரிங்கிட்டுக்கும் கூடுதலான தொகையை உட்படுத்தி இதுவரை 37 நகை விற்பனை மோசடி சம்பவங்கள் நிகழ்ந்திருப்பதாக Bukit Aman கூறியது.

i-sinar தொகை கட்டம் கட்டமாக வழங்கப்படுகிறது!கடந்த ஈராண்டுகளுடன் ஒப்பிடுகையில், இந்த எண்ணிக்கை அதிகம் என  அதன் வணிக குற்ற விசாரணை துறை தெரிவித்தது.

இத்தகைய குற்றங்களை தடுக்க Bukit Aman பல்வேறு நடவடிக்கைகளை எடுத்து வந்தாலும், இறுதி கடமை பயனர்களிடம் தான் உண்டு

இணையம் வழி நகை வாங்கும் விவகாரத்தில் அதிக எச்சரிக்கையுடன் நடந்துக் கொள்ளுமாறு அத்துறை வலியுறுத்தியது.

முன் பின் அறிமுகம் இல்லாத அல்லது தகவல்கள் உறுதிப்படுத்தப்படாத நபர்களிடம் இருந்து சந்தை விலைக்கும் குறைவாக விற்கப்படும் இத்தகைய பொருட்களை அணுக வேண்டாம் என்றும் Bukit Aman பொது மக்களை அறிவுறுத்தியது.

 

MyBayar Saman: 52 மில்லியன் ரிங்கிட் தண்டம் வசூல்!

புதிதாக அறிமுகம் கண்ட MyBayar Saman செயலி வாயிலாக, 52 மில்லியன் ரிங்கிட் போக்குவரத்து குற்றங்களுக்கான தண்டத் தொகை வசூலிக்கப்பட்டிருக்கின்றது.

i-sinar தொகை கட்டம் கட்டமாக வழங்கப்படுகிறது!

தேர்ந்தெடுக்கப்பட்ட சாலைக் குற்றங்களுக்கான தண்டங்களுக்கு வழங்கப்படும் 50 விழுக்காடு  கழிவுச் சலுகையைப் பயன்படுத்திக் கொள்ளுமாறு காவல் துறை, வாகனமோட்டிகளை கேட்டுக் கொண்டிருக்கிறது.

ஞாயிற்றுக்கிழமையோடு அச்சலுகை முடிவடைகின்றது.

 

COVID-19 தடுப்பூசி: விரைந்து உறுதிப்படுத்துங்கள்!

COVID-19 தேசிய தடுப்பூசி திட்டத்திற்கு பதிந்துக் கொண்டவர்கள், MySejahtera செயலி வாயிலாக, தடுப்பூசி போட்டுக் கொள்வதற்கான தேதி கிடைத்ததும், 48 மணி நேரத்திற்குள் அதனை உறுதிப்படுத்துமாறு கேட்டுக் கொள்ளப்படுகின்றனர்.

i-sinar தொகை கட்டம் கட்டமாக வழங்கப்படுகிறது!

இல்லையென்றால், அந்த அந்த தேதி இயல்பாகவே ரத்தாகி, மறு தேதி கொடுக்கப்படும் என COVID-19  தடுப்பூசிக்கான கையிருப்பு பணிக்குழு கூறியிருக்கின்றது.

நாட்டில் இதுவரை 83 லட்சத்திற்கும் அதிகாமனோர் கொரோனா தடுப்பூசி போட்டுக் கொள்ள பதிந்துக் கொண்டுள்ளனர்.

அவர்களில் 9 லட்சம் பேருக்கு தடுப்பூசி போடப்பட்டுள்ளது.

 

20 வயதுக்கு மேற்பட்டவர்கள் அதிகம் பாதிக்கப்படுகின்றனர்!

20 வயதுக்கு மேற்பட்டவர்களை உட்படுத்திய COVID-19 சம்பவங்கள் அதிகம் பதிவாவதற்கு, அவர்களிடம் அத்தொற்றுக்கான அறிகுறிகள் தென்படதாததும் ஒரு காரணமாக இருக்கலாம்!

பொது சுகாதார மருத்துவ நிபுணர் Dr Mohd Hazizi Mohd Hasani அவ்வாறு கூறியிருக்கின்றார்.

i-sinar தொகை கட்டம் கட்டமாக வழங்கப்படுகிறது!

அந்த வயதினரில் பல பேர் தங்களுக்கு அத்தொற்று இருப்பதே அறியாமல் இருக்க வாய்ப்பிருப்பதால், அவர்களை உட்படுத்திய சம்பவங்கள் அதிகம் பரவ அதுவே காரணமாகி விடலாம் என்றாரவர்.

மற்ற வயதினரை காட்டிலும், இளம் வயதினரை உட்படுத்திய சமூக நடவடிக்கைகள், மற்றவர்களிடத்தில் அவர்கள் பழகக்கூடிய விதம் உள்ளிட்டவை தீவிரமாக இருக்கும் என்பதால், அவர்கள் அத்தொற்றுக்கு சீக்கிரம் ஆளாகக் கூடிய நிலை ஏற்படுவதாகவும் Dr Mohd Hazizi குறிப்பிட்டார்.

ஜனவரி ஒன்றாம் தேதி தொடங்கி, 20 முதல் 29 வயதானவர்களை உட்படுத்திய கொரோனா சம்பவங்கள் அதிகரித்திருப்பதாக சுகாதார அமைச்சு வெளியிட்ட தகவல் குறித்து அவர் பேசினார்.

இதற்கு முன், 50 வயதுக்கு மேற்பட்டவர்களை உட்படுத்திய கொரோனா சம்பவங்களே அதிகம் பதிவாகி வந்த நிலையில், தற்போது இம்மாற்றம் ஏற்பட்டிருப்பதாக அமைச்சு கூறியது.

 

வியாபார நேரம் நீட்டிக்கப்பட வேண்டும்!

ரமலான் தொடங்கியதும் வியாபார நேரத்தை நள்ளிரவுக்கு மேல் நீட்டிக்க அனுமதிப்பது பற்றி பரிசீலிக்குமாறு, மலேசிய முஸ்லீம் உணவக நடத்துநர் சங்கம் PRESMA அரசாங்கத்தை கேட்டுக் கொண்டிருக்கிறது.

i-sinar தொகை கட்டம் கட்டமாக வழங்கப்படுகிறது!

நோன்பு தொடங்குவதற்கு முன்னர் கடைசியாக உண்ணும் Sahur உணவுகளை வாங்க ஏதுவாக அவ்வாறு செய்யுமாறு, பயனர்களிடம் இருந்து வந்த கோரிக்கையை PRESMA சுட்டிக் காட்டியது.

அப்படி அனுமதி வழங்கப்பட்டால், COVID-19 SOPகள் முறையாக பின்பற்றப்படுவதை வியாபாரிகளும், பொது மக்களும் உறுதிச் செய்வார்கள் என்ற நம்பிக்கை தங்களுக்கு இருப்பதாகவும் PRESMA தெரிவித்தது.

 

தாய் அல்லத் தந்தையை இழந்த பிள்ளைகள்!

அமெரிக்காவில், COVID-19 பெருந்தொற்றினால், இதுவரை 40 ஆயிரம் பிள்ளைகள், தங்களது தாய் தந்தை இருவரில் குறைந்தது ஒருவரை இழந்துள்ளனர்.

இதனால் சில குழந்தைகள் மீள முடியாத சோகத்தில் மூழ்கி விடுவதுடன் அவர்களது கல்வி வாழ்க்கையும் பாதிக்கப்படுவதாக புதிய ஆய்வு கூறுகிறது. 

 

Lee Hsien Loong, சிங்கப்பூர் பிரதமர் பதவியில் நீடிப்பார்!

சிங்கப்பூரின் பிரதமராக Lee Hsien Loong நீடிப்பார்.

i-sinar தொகை கட்டம் கட்டமாக வழங்கப்படுகிறது!

அப்பதவிக்கு வருவாரென எதிர்பார்க்கப்பட்ட துணைப் பிரதமர் Heng Swee Keat, சிங்கப்பூரின் 4ஆம் தலைமுறை அணித் தலைவர் பொறுப்பில் இருந்து விலகுவதாக அதிர்ச்சி முடிவை அறிவித்துள்ளார்.

இதையடுத்து, பிரதமர் பதவிக்கு புதிய நபர் தேர்ந்தெடுக்கப்படும் வரை Lee Hsien Loong அப்பொறுப்பில் நீடிப்பார்.

அடுத்தாண்டு பிப்ரவரி வாக்கில் பதவி விலக Lee முன்னதாக விருப்பம் தெரிவித்திருந்தார்.

 


Find out what's happening locally and abroad as well as what's trending, and don't miss out on the results of your favourite sport!

Make sure you tune in to PETRONAS News Update on THR Raaga at these times:

Weekdays

7am, 7.30am, 8am, 8.30am, 9am, 10am, 11am, 12pm, 1pm, 2pm, 3pm, 4pm, 5pm, 6pm, 7pm

Weekend

8am, 9am, 10am, 11am, 12pm

Weather