Now Playing

{{nowplay.song.artist}}

{{nowplay.song.track}}

Now playing

RAAGA

Aaha… Sirantha Isai!

Current Show

{{currentshow.name}}

{{currentshow.description}}

Current Show

RAAGA

Aaha… Sirantha Isai!

{{nowplay.song.artist}} Album Art Now playing

{{nowplay.song.track}}

{{nowplay.song.artist}}

Album Art Now playing

RAAGA

Aaha… Sirantha Isai!

{{currentshow.name}} {{currentshow.name}} Current Show

{{currentshow.name}}

{{currentshow.description}}

RAAGA Current Show

RAAGA

Aaha… Sirantha Isai!

← Back to list

"Walk-in" முறையில் தடுப்பூசி போட்டுக் கொள்ள தேதி அறிவிக்கப்படும்!

Jul 16, 2021


60 வயதுக்கு மேற்பட்டவர்கள், முன் கூட்டியே பதியத் தேவையின்றி Walk-in முறையில் தடுப்பூசி போட்டுக் கொள்ளும் திட்டம் கொண்டு வரப்படுகிறது!

அதற்கான தேதி விரைவில் அறிவிக்கப்படும் என, COVID-19 தேசிய தடுப்பூசி திட்ட ஒருங்கிணைப்பாளர் அமைச்சர் Khairy Jamaluddin தெரிவித்தார்.

walk-in முறையில் தடுப்பூசி போட்டுக் கொள்ள தேதி அறிவிக்கப்படும்!

தொடக்க கட்டமாக கோலாலம்பூர் மற்றும் சிலாங்கூரில் உள்ள 60 வயதுக்கு மேற்ப்பட்டவர்களுக்கு அத்திட்டம் மேற்கொள்ளப்படும்

இது முன்னோடித் திட்டம் தான் என்பதால், அதனை தொடங்குவதற்கு முன்பாக, தடுப்பூசி மையங்களில் தடுப்பூசிக் கையிருப்பு போதுமான அளவில் இருப்பது உறுதிச் செய்யப்பட வேண்டும் என அமைச்சர் Khairy கூறியுள்ளார்.

அதே சமயம், தடுப்பூசி மையங்களில் வயதானவர்களை உட்படுத்தி நெரிசல் ஏற்படாமல் இருப்பதையும் உறுதிச் செய்ய வேண்டியிருப்பதாக அவர் சொன்னார்.

இன்னும் தடுப்பூசிக்குப் பதியாத 60 வயதுக்கு மேற்பட்டவர்கள், இந்த Walk-In முறை தொடங்கும் தேதி குறித்த அறிவிப்பு வரும் வரை காத்திருக்குமாறு Khairy கேட்டுக் கொண்டார்.

 

பதினைந்தே வினாடிகளில் பரவும்!

Delta உள்ளிட்ட புதிய வகை கொரோனா கிருமிகள், காற்று வாயிலாகபதினைந்தே வினாடிகளில் பரவி, ஒருவரை தொற்றி விடும் ஆபத்தை கொண்டுள்ளன.

அவ்வகை கிருமிகள் அதிக வீரியமும், மிக வேகமாக பரவும் ஆற்றலும் கொண்டவை என, சுகாதார தலைமை இயக்குநர் Tan Sri Dr Noor Hisham Abdullah கூறியுள்ளார்.

walk-in முறையில் தடுப்பூசி போட்டுக் கொள்ள தேதி அறிவிக்கப்படும்!

முதல் 100 பேரை தொற்றும் அக்கிருமி, குறைந்தப்பட்ச நேரத்தில், 500 முதல் 800 பேருக்கு பரவக்கூடிய தன்மை கொண்டிருப்பதாக அவர் சொன்னார்.

ஜூன் 26ஆம் தேதியில் இருந்து நாட்டில் பதிவாகும் தினசரி கொரோனா சம்பவங்களின் எண்ணிக்கை தொடர்ந்து அதிகரித்து வருவதற்கு, டெல்தா வகை கொரோனா கிருமிப் பரவலும் காரணம் என்றாரவர்.

நேற்று, இதுவரை இல்லாத அளவுக்கு புதிதாக 13 ஆயிரத்து 215 COVID-19 சம்பவங்கள் பதிவாகின; 110 பேர் அத்தொற்றினால் உயிரிழந்தனர்.

 

தடுப்பூசி போட்டக் கொண்ட முன்களப் பணியாளர்களில் 0.2 விழுக்காட்டினருக்கு மட்டுமே 3, 4ஆம் கட்ட பாதிப்பு!

இரு டோஸ் தடுப்பூசிகளைப் போட்டு முடித்த தனது முன்களப் பணியாளர்கள் யாரும் COVID-19 தொற்றின், 5ஆம் கட்டத்தை எட்டவில்லை என சுகாதார அமைச்சு தெரிவித்துள்ளது.

2 லட்சத்து 45 ஆயிரத்திற்கும் அதிகமான மருத்துவ முன்களப் பணியாளர்களில், ஏறக்குறைய மூவாயிரம் பேருக்கு மட்டுமே மூன்றாம் மற்றும் 4ஆம் கட்ட பாதிப்பு ஏற்பட்டதாக அமைச்சு கூறியது.

3ஆம் கட்ட பாதிப்பு என்பது, நிமோனியாவை ஏற்படுத்தக்கூடியதாகும்

4ஆம் கட்ட பாதிப்பு என்பது, அவர்களுக்கு oksigen உதவி தேவைப்படுகிறது என்பதாகும்.

walk-in முறையில் தடுப்பூசி போட்டுக் கொள்ள தேதி அறிவிக்கப்படும்!

நாட்டில் கடந்த 4 நாட்களில் மட்டும் 16 லட்சம் பேருக்கு COVID-19 தடுப்பூசி போடப்பட்டது.

நேற்று ஒரு நாளில் மட்டும் 4 லட்சத்து 60 ஆயிரத்திற்கும் அதிகமானோர் தடுப்பூசி போட்டுக் கொண்டனர்.

 

தடுப்பூசி கடப்பிதழ் தேவையில்லை!

அனைத்துலகப் பயணம் மேற்கொள்ள, தடுப்பூசி கடப்பிதழ் வைத்திருக்க வேண்டிய தேவையில்லை என்ற தனது நிலைப்பாட்டில், உலக சுகாதார நிறுவனம் WHO உறுதியாக இருக்கின்றது.

சில நாடுகள் தடுப்பூசி கையிருப்பைப் பெறுவதில் சிக்கலை எதிர்நோக்கியுள்ளன

இந்நிலையில்தடுப்பூசி போட்டால் மட்டுமே அனைத்துலக பயணம் மேற்கொள்ள முடியும் என்ற விதிமுறையை கொண்டு வருவது சரியல்ல என WHO கூறியிருக்கின்றது

 

மேலும் சில கடைகளை திறக்க அனுமதி! 

கணினி, தொலைத்தொடர்பு சாதனங்கள், புத்தகம் மற்றும் எழுத்து  உபகரணப் பொருட்கள் விற்பனை செய்யும் கடைகள் இன்று முதல் திறக்க அனுமதிக்கப்படுகின்றன!

walk-in முறையில் தடுப்பூசி போட்டுக் கொள்ள தேதி அறிவிக்கப்படும்!

துணைப் பிரதமர் Datuk Seri Ismail Sabri Yaakob அதனை தெரிவித்துள்ளார்.

இதற்கு முன், தேசிய மீட்சித் திட்டத்தின் 2ஆம் கட்டத்தில் நுழையும் போது தான் அக்கடைகள் செயல்பட முடியும் என அரசாங்கம் அறிவித்திருந்தது.

ஆனால், வீட்டில் இருந்து கல்வி கற்கும் PdPR திட்டம் சுமூகமாக மேற்கொள்ளப்படுவதை உறுதிச் செய்ய, மாணவர்கள், பெற்றோர்கள் மற்றும் கல்வியாளர்களிடம் இருந்து வந்த கருத்துகளை அடிப்படையாக கொண்டு அக்கடைகளை முன்கூட்டியே திறக்க முடிவெடுக்கப்பட்டதாக அவர் கூறினார்.

 

Tengku Adnan விடுவிக்கப்பட்டு விடுதலை செய்யப்பட்டார்!

தேசிய முன்னணி ஆட்சியில் கூட்டரசுப் பிரதேசத் துறை அமைச்சராக இருந்த போது 2 மில்லியன் ரிங்கிட் கையூட்டு வாங்கிய குற்றச்சாட்டில் இருந்து, Datuk Seri Tengku Adnan Tengku Mansor, விடுவிக்கப்பட்டு விடுதலை செய்யப்பட்டுள்ளார்.

walk-in முறையில் தடுப்பூசி போட்டுக் கொள்ள தேதி அறிவிக்கப்படும்!புத்ராஜெயா மேல்முறையீட்டு நீதிமன்றம் அத்தீர்பை அறிவித்துள்ளது.

அது கையூட்டுப் பணம் அல்ல மாறாக இடைத்தேர்தல்களுக்குப் பயன்படுத்த பெறப்பட்ட அரசியல் நன்கொடை என மூவரடங்கிய நீதிபதி குழு தீர்ப்பில் கூறியது.

இதையடுத்து Tengku Adnan-னுக்கு முன்னதாக உயர்நீதிமன்றம் அளித்த 12 மாதங்கள் சிறை மற்றும் 2 மில்லியன் ரிங்கிட் தண்டம் தள்ளுபடி செய்யப்பட்டது.
 

 

 


Find out what's happening locally and abroad as well as what's trending, and don't miss out on the results of your favourite sport!

Make sure you tune in to PETRONAS News Update on THR Raaga at these times:

Weekdays

7am, 7.30am, 8am, 8.30am, 9am, 10am, 11am, 12pm, 1pm, 2pm, 3pm, 4pm, 5pm, 6pm, 7pm

Weekend

8am, 9am, 10am, 11am, 12pm

Weather