Now Playing

{{nowplay.song.artist}}

{{nowplay.song.track}}

Now playing

RAAGA

Aaha… Sirantha Isai!

Current Show

{{currentshow.name}}

{{currentshow.description}}

Current Show

RAAGA

Aaha… Sirantha Isai!

{{nowplay.song.artist}} Album Art Now playing

{{nowplay.song.track}}

{{nowplay.song.artist}}

Album Art Now playing

RAAGA

Aaha… Sirantha Isai!

{{currentshow.name}} {{currentshow.name}} Current Show

{{currentshow.name}}

{{currentshow.description}}

RAAGA Current Show

RAAGA

Aaha… Sirantha Isai!

← Back to list

வெள்ளம் : குழந்தைகள் கவனம்!

Jan 16, 2024


வெள்ளம் : குழந்தைகள் கவனம்!

வெள்ள சமையத்தில் குழந்தைகளின் ஆரோக்கியம் குறித்து மெத்தனமாக இருந்துவிடாதீர்கள்! 

அவர்களின் உணவு, பால் இவையெல்லாம் சுத்தமாக அவர்களுக்குப் பாதுகாப்பானதாக இருப்பதை உறுதிச் செய்வது மிக அவசியம் என பெற்றோர்களை வலியுறுத்துகிறார் மலேசிய மருத்துவச் சங்கத்தைச் சேர்ந்த Dr வாசுபிள்ளை லெட்சுமனன்.

அதோடு நீர் தேங்குமிடங்களைத் தவிர்க்குமாறு அவர் கேட்டுக் கொண்டார். 

வெள்ளம் ஏறும் போது தான், ஏடிஸ் கொசுக்களின் நடமாட்டம் அதிகம் இருக்கும் என்பதால், டெங்கி பரவ வாய்ப்பு அதிகம் உள்ளது என்றார் அவர். 

--------

டெங்கி காய்ச்சலைத் தடுக்கும் Wolbachia கொசு திட்டம் மேலும் பத்து இடங்களுக்கு விரிவுப்படுத்தப்படுகிறது! 

2019ஆம் ஆண்டிலிருந்து நாடு முழுவதும் 30 இடங்களில் அமுலபடுத்தப்பட்டு வந்துள்ள இத்திட்டம் வெற்றி கண்டிருப்பதாக, சுகாதார அமைச்சர் Datuk Seri Dr Dzulkefly Ahmad கூறினார். 

Wolbachia வகை கிருமி செலுத்தப்பட்ட கொசுக்களை விடுவித்து, ஏடிஸ் கொசுக்களின் இனப்பெருக்கம் மற்றும் டெங்கியைப் பரப்பும் திறனைத் தடுப்பதே அத்திட்டமாகும். 

-------- 

கடந்தாண்டு நாடு முழுவதும் ஒரு லட்சத்து 23 ஆயிரத்துக்கும் அதிகமான டெங்கி காய்ச்சல் சம்பவங்கள் பதிவாகின. 

நூரு மரணங்களும் பதிவானதாக சுகாதார அமைச்சு தகவல் வெளியிட்டுள்ளது. 

அவ்வெண்ணிக்கைகளானது 2022ஆம் ஆண்டை விட 86 விழுக்காடு அதிகம். 

டெங்கி சம்பவங்கள் அதிகம் பதிவாகும் பகுதிகளான KL மற்றும் சிலாங்கூரில், நிலைமையைக் கையாள்வதற்கான சிறந்த வழிமுறைகளைத் தமது தரப்பி கண்டறிந்து வருகிறது என KKM சொன்னது. 

---------   

பஹாங், நெகிரி செம்பிலான், மற்றும் ஜொகூரில் கனமழை எச்சரிக்கை!  

அம்மாநிலங்களின் குறிப்பிட்ட பகுதிகளில் இன்று காலை ஒன்பது மணி வரை இடியுடன் கூடிய கனமழையை எதிர்ப்பார்க்கலாம். 

---------  

பள்ளி பேருந்து கட்டணத்தை உயர்த்த எந்த முடிவும் இதுவரை எடுக்கப்படவில்லை! 

பங்குதாரர்களிடமிருந்து கருத்துகள் பெறப்பட்டு வந்தாலும், அவ்விவகாரம் பேச்சு வார்த்தையில் தான் இருக்கிறது என போக்குவரத்து அமைச்சு கூறியுள்ளது. 

வரும் மார்ச் மாதத்திலிருந்து பேருந்து கட்டணம் பத்திலிருந்து 20 ரிங்கிட் வரை உயரலாம் என, பேருந்து நடத்துனர்கள் சங்கம், முன்னதாகக் கூறியிருந்தது. 

--------- 

லங்காவியில் ஒரு தட்டு ayam goreng kunyit உணவுக்கு 20 ரிங்கிட் விலை விதித்த உணவகம் ஒன்றுக்கு, உள்நாட்டு வாணிக வாழ்க்கைச் செலவீன அமைச்சு எச்சரிக்கை நோட்டீஸ் வெளியிட்டுள்ளது. 

 

 

 

 

 


Find out what's happening locally and abroad as well as what's trending, and don't miss out on the results of your favourite sport!

Make sure you tune in to PETRONAS News Update on THR Raaga at these times:

Weekdays

7am, 7.30am, 8am, 8.30am, 9am, 10am, 11am, 12pm, 1pm, 2pm, 3pm, 4pm, 5pm, 6pm, 7pm

Weekend

8am, 9am, 10am, 11am, 12pm

Weather